தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜய், சூர்யா, மாதவன், தனுஷ், ஜெயம்ரவி நடிகர் சங்கம் சார்பில் புதிய கிரிக்கெட் அணி: இந்தி, தெலுங்கு நடிகர்களுடன் மோதல்

Go down

விஜய், சூர்யா, மாதவன், தனுஷ், ஜெயம்ரவி நடிகர் சங்கம் சார்பில் புதிய கிரிக்கெட் அணி: இந்தி, தெலுங்கு நடிகர்களுடன் மோதல் Empty விஜய், சூர்யா, மாதவன், தனுஷ், ஜெயம்ரவி நடிகர் சங்கம் சார்பில் புதிய கிரிக்கெட் அணி: இந்தி, தெலுங்கு நடிகர்களுடன் மோதல்

Post  ishwarya Sat Apr 20, 2013 6:11 pm

நடிகர் சங்கம் சார்பில் தமிழ் நடிகர்களை கொண்ட புதிய கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு “சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்” என்று பெயரிடப்பட்டு உள்ளது.

ஏற்கனவே தெலுங்கு நடிகர்கள் கிரிக்கெட் அணி துவங்கி போட்டிகளில் விளையாடி வருகின்றனர். கன்னட நடிகர்களும் விளையாடுகிறார்கள். இந்தியில் சல்மான்கான் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் கிரிக்கெட் அணி உதயமாகியுள்ளது.

தற்போது தமிழ் நடிகர்களும் கிரிக்கெட்டில் நுழைகிறார்கள். நான்கு மொழி நடிகர் களையும் உள்ளடக்கி செலிப்ரட்டி கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன.

இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் நிருபர் களிடம் கூறியதாவது:-

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட நடிகர்களிடையே நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டிகள் ஜனவரி 22, 23 மற்றும் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழ் நடிகர்கள் அணியில் சூர்யா, விஜய், மாதவன், சிம்பு, தனுஷ், ஆர்யா, ஜெயம்ரவி, பரத், ஜீவா, அருண்விஜய், சாந்தனு, விக்ராந்த், நரேன், ஷாம், ஜெய், கார்த்திக்குமார், ரமேஷ், ரமணா, அமர் வர்த்தன், உள்ளிட்ட பலர் இடம் பெறுவார்கள். நானும் இருப்பேன்.

அப்பாஸ் இந்த அணியை வழிநடத்துவார். கேப்டன் பிறகு தேர்வு செய்யப்படுவார். இவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட நடிகர்களுக்கிடையே 6 லீக் போட்டிகளும், ஒரு இறுதி போட்டியும் நடத்தப்படும்.

வெற்றி பெறும் அணிக்கு ரொக்கப்பரிசு மற்றும் சுழற்கோப்பை வழங்கப்படும். இதில் வசூலாகும் தொகையில் குறிப்பிட்ட பகுதி சமூகசேவை பணிகளுக்கு செலவிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த போட்டிகளை ராதிகாவின் ராடான் மீடியா மற்றும் சீனிவாசலு மூர்த்தி, திருமால்ரெட்டி, விஷ்ணுவர்த்தன், இந்தூரி ஆகியோர் நடத்துகின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சூர்யா, ஜெயம்ரவி, ஸ்ரீகாந்த் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் அணிக்கு திரிஷா தூதுவர்?
» விக்ரமுடன் தெலுங்கு நடிகர் ராணா மோதல்
» விக்ரமுடன் தெலுங்கு நடிகர் ராணா மோதல்.
» தெலுங்கு நடிகர் சங்கம் திரிஷா, ஸ்ரேயா, சினேகாவுக்கு நோட்டீஸ்; “15 நாளில் உறுப்பினராகாவிட்டால் நடிக்க தடை விதிக்கப்படும்”
» `ஒய்திஸ் கொலை வெறிடி’; நடிகர் தனுஷ் பாடலுக்கு இந்தி பாடலாசிரியர் எதிர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum