தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓவியாவுக்கு அடித்த ஜாக்பாட்

Go down

ஓவியாவுக்கு அடித்த ஜாக்பாட் Empty ஓவியாவுக்கு அடித்த ஜாக்பாட்

Post  ishwarya Fri Apr 19, 2013 4:25 pm

“களவாணி” படத்தில் அறிமுகமான ஓவியாவுக்கு, இப்போது ஜாக்பாட் அடித்திருக்கிறது. தமிழை தொடர்ந்து “களவாணி” படம் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இதில் இரண்டிலும் ஓவியாவே ஹீரோயினாக நடிக்கிறார்.

“களவாணி” படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ஓவியா. முதல் படத்திலேயே முன்னணி நடிகை ரேஞ்சுக்கு பேசப்பட்ட ஓவியாவுக்கு நிறைய படவாய்ப்புகள் வருகின்றனவாம். ஆனால் அவற்றை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை ஓவியா. சிலபடங்களை வேண்டாமென்று இவரே ஒதுக்கியும் வருகிறார். இதனிடையே இவருடன் சேர்ந்து நடிக்க வந்த நடிகை அமலாபாலின் ரேஞ்சோ இன்று எங்கோ போய்விட்டது. விக்ரம், விஷால், மாதவன் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் நடிகை ஓவியாவுக்கு புது ரூட் கிடைத்திருக்கிறது. தமிழை தொடர்ந்து களவாணி படம் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இதில் நாயகியாக நடிக்க ஓவியாவே ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தபடத்தின் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தால் தெலுங்கு, கன்னடம், தமிழ் என்று மூன்று மொழியிலும் ஒரு ரவுண்ட் வந்து கலக்கிடலாம் என்று எண்ணி கொண்டு இருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum