தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மேக்கப் பொருந்தவில்லை: தீபிகா படுகோனே மீது ரஜினி அதிருப்தி; “ரானா” படத்தில் இருந்து நீக்கப்படுவாரா?

Go down

மேக்கப் பொருந்தவில்லை: தீபிகா படுகோனே மீது ரஜினி அதிருப்தி; “ரானா” படத்தில் இருந்து நீக்கப்படுவாரா? Empty மேக்கப் பொருந்தவில்லை: தீபிகா படுகோனே மீது ரஜினி அதிருப்தி; “ரானா” படத்தில் இருந்து நீக்கப்படுவாரா?

Post  ishwarya Fri Apr 19, 2013 12:32 pm

ரஜினி மூன்று வேடத்தில் நடிக்கும் “ரானா” பட வேலைகள் துவங்கி உள்ளன. இந்த படத்துக்கான கதை கரு ரஜினியுடையது. கே.எஸ். ரவிக்குமார் திரைக்கதையை உருவாக்கி உள்ளார்.

கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் நடப்பது போன்ற கதை எனவே வரலாற்று கால அரங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. பெரும்பாலான காட்சிகளை லண்டனிலும் ஐரோப்பிய நாடுகளிலும் எடுக்கின்றனர்.

ரஜினியுடன் நடிக்க தீபிகா படுகோனே, இலியானா ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளனர். தீபிகா படுகோனே இளம் ரஜினிக்கு ஜோடியாக வருகிறார். ரஜினியுடன் நடிப்பதற்காகவே பிற படங்களின் கால்ஷீட் தீபிகா படுகோனே ஒதுக்கி கொடுத்துள்ளார். சரித்திர கால படம் என்பதால் பரத நாட்டியமும் கற்று வருகிறார். ஆசிரியர்களை வைத்து சமஸ்கிருதம் மொழியையும் படிக்கிறார்.

இந்த நிலையில் தீபிகா படுகோனே “ரானா” படத்தில் நடிப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இப்படத்துக்கென சமீபத்தில் பிரத்யேக போட்டோ ஷ¨ட் நடத்தினர். ரஜினியையும் தீபிகா படுகோனேயையும் விதவிதமான புரதான ஆடைகளில் படம் பிடித்தனர். போட்டோக்கள் எடுத்த பிறகு படங்களை பார்த்த ரஜினி அதிருப்தியானார்.

திபிகா படுகோனே மேக்கப் அவருக்கு பொருந்தவில்லை. நீளமான கால்கள், பெரிய இடை போன்றவை கேரக்டருக்கு சரியாக இல்லை. தீபிகா படுகோனே தோற்றத்தை மாற்றி மேலும் அழகுபடுத்தும்படி மேக்கப் நிபுணர்களிடம் அறிவுறுத்தி உள்ளார். வேறு காஸ்ட்யூம் மற்றும் மேக்கப்பில் தீபிகா படுகோனேயை மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன.

இதிலும் ரஜினிக்கு திருப்தி ஏற்படவில்லை என்றால் தீபிகா படுகோனே மாற்றப்படலாம் என பேச்சு அடிபடுகிறது. ரானா படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினியுடன் நடிக்க இந்தி படத்தில் இருந்து விலகலா?- தீபிகா படுகோனே பேட்டி
» 3 வேடங்களில் ரஜினி நடிக்கும் “ராணா” படப்பிடிப்பு தொடக்கம்; ரஜினி-தீபிகா படுகோனே நடித்த காட்சிகள் படமானது
» ரஜினி அன்பானவர், அடக்கமானவர்: தீபிகா படுகோனே
» ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினியுடன் நடித்தது இனிய அனுபவம்: தீபிகா படுகோனே
» ‘கோச்சடையான்’ படப்பிடிப்பு 15-ந்தேதி தொடக்கம்: ரஜினி, தீபிகா படுகோனே காதல் காட்சிகள் படமாகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum