தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தை பாக்கியம் தரும் அனுமன் வழிபாடு

Go down

குழந்தை பாக்கியம் தரும் அனுமன் வழிபாடு Empty குழந்தை பாக்கியம் தரும் அனுமன் வழிபாடு

Post  gandhimathi Mon Jan 21, 2013 12:38 pm




வாயு பூதர் என அன்போடு அழைக்கப்படுவர் ஸ்ரீமன் ஆஞ்சநேயர் ஆவார். பெருமாள் திரு அவதாரம் எடுக்கும் போதெல்லாம் வாயு பூதர் கண்டிப்பாக அவதரிக்கின்றார். திரே தாயுகத்தில் அனுமனாகவும், சூவாபரயுகத்தில் பீமனாகவும் கலியுகத்தில் மத்வாச்சாரியராகவும் உலகில் அவதரித்து பெருமாள் கைங்கர்யம் செய்வதுடன் மக்களையும் காத்தருள் புரிகின்றார் என்பது உலகம் அறிந்ததே.

ஹரி என்றால் சுதந்திரர், தன்னிச்சையாக வரம் வழங்குபவர் என்று பொருள். மற்றவர்கள் அனைவரும் மஹாவிஷ்ணுவுக்கு உபச்சாரம் செய்து அவரது அருளாணைக்கு கட்டுப்பட்டவர்களாகின்றனர். தேவர்களின் இரு பிரிவில் ஒன்று ஜீவர்கள் என்றும் மற்றொன்று ஆதிபூதர்கள் என்றும் வழங்கப்படுகின்றது.

ஜீவர்களில் வாயு பகவான் உத்தமர் என்றழைக்கப்படுகின்றார். இவருடைய அனுக்கிரகத்தால் தான் மற்ற எல்லா ஜீவர்களும் முக்தி நிலை பெறுகின்றார்கள். அதாவது தேவர்கள் மட்டுமின்றி மனிதர்களும் இறைநிலை தியானத்தில் ஒன்ற இந்த ஆன்மாவை ஒடுக்க வாயு பகவானின் பங்களிப்பு தலையாயது.

நாம் பேசும் பேச்சு, போற்றும் துதி, விடும் மூச்சு என வாயு பகவானின் அருளாசியால் விழிப்பு நிலை பெறுகின்றது. எனவே ஹரி எல்லாரையும் காப்பதில் உத்தமர் (ஹரிசர்வோத்தமா) வாயு பகவான் ஜீவர்களில் உத்தமர் என வைணவ சம்பிரதாயங்கள் போற்றுகின்றன. எனவே சர்வ வல்லமை படைத்த வாயுவின் அம்ஸமாக நம் கண்களுக்கு விருந்தாக தோன்றியவர் அனுமன் ஆவார்.

இவர் மார்கழி மாதத்தின் ஞாயிற்றுக்கிழமை நாளில் அமாவாசை திதியும் நிறைந்த வேளையில் மூல நட்சத்திரத்தில் வாயு பகவானுக்கும் அஞ்சனை தேவிக்கும் மகனாக அவதரித்த நாளே அனுமத் ஜெயந்தி நாளாக போற்றி வழிபட்டு வருகின்றோம் என்கிறார் விஜய்சுவாமிஜி.

பஞ்சமுக ஆஞ்சநேயர்:

ஹனுமன் முகம், நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹமுகம், ஹக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முகவடிவில் ஒருங்கிணைந்து உள்ளார். கிழக்கு முகம் ஹனுமனாக சத்ருக்களை அழிக்க வந்த முகம் "பிரதிவாதி முகஸ்நம்பி'' என்ற சுலோக வரியினால் அனுமனை வேண்டினால் எதிரிகள் விலகுவர் என பொருள் தரும்.

தெற்கு முகம் நரசிம்ம முகம். இம்முக ரூப ஆஞ்சனேயர் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள், பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம். மேற்கு முகம் கருடன் முகத் தரிசனம் சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தரும். வடக்கு முகம் வராஹமுகத் தரிசனம், தீராத கடன், பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள் முதலியனவற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது.

பொருளாதார மேன்மை உண்டாகும். மேல் முகம் ஸ்ரீஹயக்கிரீவர் முகம். இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும், சிறந்த ஞானத்தையும், சொல்வன்மையையும், சகல கலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர் சொல்லின் செல்வன் என சீதையால் போற்றப்பட்ட அனுமனை பஞ்சமுக ஆஞ்ச நேயராக வழிபாடு செய்யும் போது உங்களுக்கும் சொல் வன்மை, ஆரோக்யம், எதிரிகள் விலகல் என அனைத்தும் உண்டாகும். பஞ்சமுக ஆஞ்சநேயர் திருநள்ளார் நள தீர்த்தத்தில் இருந்து வரும் வழியில் அருள் தருகின்றார்.

வீட்டில் வழிபடுவது எப்படி?

ஆஞ்சனேயருக்கு பழவர்க்கங்கள் மிகவும் பிரீத்தி என்பதால் வீட்டில் ஆஞ்ச நேயர் படம் வைத்து நான்கு புறத்திலும் பந்தல் போல் செய்து, பந்தலில் பூச்சரம் ஒரு வரிசையும், பழச்சரம் ஒரு வரிசையுமாக கட்டி பழப்பந்தல், பூப்பந்தல் அலங்கரிக்க வேண்டும்.

வடை, வெண்ணெய் வைத்து நெய் தீபம் ஏற்றி ராமாயணத்தின் சுந்தரகாண்டம், ஆஞ்சநேய தண்டகம், ஸ்ரீஅனுமத்துதி (சாம்பவான் புகழ்தல்) ஸ்ரீஆஞ்சநேயர் திருப்பதிகம், மாருதி கவசம், ஸ்ரீஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், ஆஞ்சநேயர் போற்றி வழிபாடு, ஆஞ்சநேயர் சத நாமா வழி, ஆஞ்ச நேயர் சகஸ்ர நாமா வழி போன்றவற்றை வீட்டில் படித்து பூஜை செய்து அருகில் உள்ளவர்களுக்கு பிரசாதமாக தந்து மகிழலாம்.

இத்தனை வகையும் தெரியாதே என யோசிக்க வேண்டாம், ராமா, ராமா எனும் ராம நாமம் ஜெபித்தாலே ஆஞ்சநேயர் அருகில் வந்து அருள் தருவார். உங்கள் குழந்தைகளுக்கு ஆஞ்சநேயரின் பராக்கிரமங்களை இன்று சொல்லி வையுங்கள் பயமின்றி படிப்பார்கள்.

அனுமனின் பெயர்கள்:

பாவங்களில் இருந்து விடுதலை செய்பவர் என பொருள் படும் `பவமானர்' என்றும், கவிகளின் அரசன் என்ற பொருளில் `கபீஷர்' என்றும் வேதங்களில் அனுமனுக்கு இரு பெயர் உள்ளது. மேலும் ராமபக்தர், வாயுபுத்திரர், அஞ்சனை மைந்தர் ஆஞ்சனேயர், ஹனுமான் என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் அனுமன்.

வழிபாட்டுப் பலன்:

கடன் அகலும், வறுமை நீங்கும், பயம் அடியோடு ஓடும், கவலைகள் நீங்கும், திருமணத் தடை அகலும், நாகதோஷம், பில்லி, சூனியம் விலகும், தொழில் மேன்மை உண்டாகும். குழந்தைகள் இரவில் பயத்தினால் அலறுவது அகலும், பாயில்-படுக்கையில் சிறுநீர் கழிவது நிற்கும். புத்திர பாக்யம் கிட்டும், பிறந்த நாளில் மகிழ்ச்சியாக இருப் பவரிடம் வேண்டுவது எல்லாம் கிடைத்து உன்னத நிலை அடைவீர்கள்.

வெளித் தொடர்புகள், நட்பின் மேன்மை உண்டாகும். வேண்டுவன அனைத்தும் பெற்று வெற்றியாளராக உலாவருவீர்கள். எனவே வாருங்கள் ஆஞ்சநேயரை தரிசித்து வருவோம் என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையைச் சேர்ந்த விஜய்சுவாமிஜி.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum