தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இஷ்டப்பட்டதை ஈடேற்றும் அஷ்டமி வழிபாடு

Go down

 இஷ்டப்பட்டதை ஈடேற்றும் அஷ்டமி வழிபாடு Empty இஷ்டப்பட்டதை ஈடேற்றும் அஷ்டமி வழிபாடு

Post  amma Fri Jan 11, 2013 4:00 pm

திருஞான சம்பந்தராகப் போற்றப்படும் ஆளுடைப் பிள்ளை என்ற ஞானக் குழந்தை
ஞானம் பெற்ற கோயில் இது. பிரம்ம தீர்த்தக் கரையில் அம்பாள் பொற்கிண்ணத்தில்
ஞான சம்பந்தருக்கு பால் ஊட்டிய தலம். நாம் ஒவ்வொருவரும் தொழவேண்டிய
அற்புதக் கோயில். ஆதிசங்கரர், தமது ‘சௌந்தர்யலஹரி’ என்ற நூலில்,
‘‘ஞானப்பால் பார்வதி தேவியிடம் இந்த திராவிட சிசு உண்டது சத்தியம்’’ என
கொண்டாடுகிறார். திருநாவுக்கரசரை ‘அப்பர்’ என ஞானசம்பந்தபிரான் அழைத்துப்
போற்றிய புண்ணிய கோயில் இந்த சட்டநாதர் கோயில். சீர்காழி என்ற ஊருக்கே
புகழைச் சேர்த்த இந்த சட்டநாதர், பைரவ சுவாமியின் மறு பதிப்பு,
வேற்றுருதான். அஷ்டமி திதி தேய்பிறையில், இங்கு எட்டுவித பைரவ
மூர்த்திகளும் கூடி நின்று பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனராம்.
எனவே, ‘தேய்பிறை அஷ்டமி திதி மாலை வேளையில் சட்டநாதனை தொழுபவர் பெரும்
பாக்யவான்களே’ என்கிறார், அகஸ்தியர்.

‘‘அட்ட பைரவருமோருருவாகி
கிருட்ண பட்ச யட்டமியந்தியில்
அருள் பரிபாலிக்க தொழுதிருப்
பாருக்காததேது’’
-என்கிறது, அகஸ்தியர் நாடி.

பிரம்மபுரீஸ்வரர்
அம்பலம் என சித்தர்கள் கொண்டாடும் இத்திவ்ய ஆலயத்தில், கீழ் தட்டில்
பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். நடுத்தட்டில், பெரிய நாகர் சமேத பெரிய
நாயகி கொலுவிருக்க தோணியப்பரென அவரை மாந்தர் கொண்டாடக் காணலாம்.
சட்டநாதர் எனும் வடக்குநாதன் தனி சந்நதி கொண்டு மேல்தட்டில் லோகபரிபாலனம்
செய்கிறார். பல ஆண்டுகளுக்கு மேலான வழக்குகள், ஊர் வம்பில் மாட்டிக்
கொண்டு விழிக்கும் மாந்தர்கள், மருமகளிடம் சிக்கிய குடும்பத்தினர்,
மாமனார், மாமியார் கொடுமையில் குமுறும் பெண்கள் என எப்படிப்பட்ட
கொடுமைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமா? நீங்கள் நம்பிச் சென்று
தொழுது நிவாரணம் பெற ஒரு கோயில் உண்டு என்றால் அதுதான் சட்டநாதன் கோயில்.
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் மாலை வேளையில் சட்டநாதனை ஆத்ம
சுத்தியுடன், ஏகமனதாய் பூஜிக்க வேண்டும். எட்டு மாதத்தில் கை கண்ட பூரண
குணம் கிட்டும் என்கின்றது அகஸ்தியர் நாடி.

‘‘நாடியட்டமி யது
நாளதனிலே ஆத்ம சுத்தியொடு பிரம்மச்சாரிய வ்ரதமேற்று வடக்கு நாதனை
யேத்துவார். வழக்குஞ் ஜெயம் பெறுமே: மருமாள் தன்னால் வந்த பீடையும் -
மனைமிதித்தார் தம் பீடையுமகல பாரீர் - யெண்ணிய கல்வி கிட்டுமடுத்தும்
திண்ணமாய் நற்பணியுஞ் சேரும், நல்வரன் குலம் கூடுமன்றோ!’’ இங்கு
இருபத்திரெண்டு புண்ணிய தீர்த்தங்கள் உண்டு. என்றாலும் எல்லா சித்தர்களும்
கொண்டாடக்கூடிய தீர்த்தம், பிரம்ம தீர்த்தமே ஆகும். வாழ்வில்
ஒருமுறையாயினும் இதில் நீராட பிறவிப் பயனை அடையலாம். இங்கு சட்டை முனி
சித்தர் என்ற 18 சித்தர்களுள் முக்கியம் வாய்ந்த சித்தரின் ஜீவ சமாதி
உண்டு. சதுரகிரி மலையில் இறைவனை நேரில் கண்டவர் இவர். ‘தோணியப்பர் என்ற
பெயருடன், யாம் தோணிமேல் அமர்ந்திருக்கும் புண்ணிய க்ஷேத்திரத்தில் அடங்கி
எமை நாடி வருவாரை ஆசி செய்’ என்றான் சட்டநாதன். அதனாலேயே ஜீவசமாதி நிலை
கொண்டு இறையருளால் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகின்றார். ஒவ்வொரு
அமாவாசை நடுநிசியில் 18 சித்தர்களும் கூடி இறைவனை ஆராதிக்கும் ஒரே கோயில்
பூவுலகில் இதுவே என்கிறது நாடி. ‘‘மதியொழியுந் நிசிக்காலத்து மூவாறு
சித்தருங் கூடி பிரும்மபுரியீசனை தொழக் கண்டின்புற்றேரும்’’ என்கிறார்,
அகஸ்தியர்.‘ஓம் சிவ சிவ ஓம்’ என ஒரு கோடி முறை ஒரு முகமாய் ஜபித்தால்,
சித்தர்கள் தரிசனம் கிட்டும் என்கிறது நாடி. ‘சரபேஸ்வரர்’ என்பது
சிவபெருமானின் ஒரு ரூபம். இவர் அழிக்கும் கடவுள் அல்ல, காக்கும் கடவுள்.
‘சரபேஸ்வரர்’ என்றால், மகாவிஷ்ணுவும் பிரத்யங்கரா தேவியும் சிவனுள் கலந்து
நிற்கும் அமைப்பாகும்.

எப்படிப்பட்ட குற்ற வழக்குகளில் இருந்தும்
முழுமையாக விடுதலை வாங்கி தரத்தக்க தெய்வம். நீதிபதி பதவி வேண்டுவோரும்
வழக்கில் இருந்து விடுபட வேண்டுபவரும் தொழத்தக்க தெய்வமே இந்த சரபேஸ்வரர்.
இந்த சரபேஸ்வரரே சட்டநாதனை அஷ்டமி திதியில் தொழுகிறார். ஏன்? பக்தர்களின்
குறைகளை போக்குகையில், அவர்களின் பாவ தோஷங்கள் இவரைப் பற்றிக் கொண்டு
இவரது புனிதத்தை கெடுக்கின்றனவாம். அதனால், இழந்த சக்தியை பெற சரபேஸ்வரர்
இந்த சட்டநாதரைத் தொழுகிறாராம்! பஞ்ச நதிகளும் இவரை போற்றுகின்றன. பஞ்ச
பூதங்களும் சட்ட நாதனை தொழுது பணிவிடை புரிகின்றனர். திருஞான சம்பந்தரும்
அப்பர் பெருமானும் அனுதினமும் தொழும் மூர்த்தி இவர் என்கின்றார்

அகஸ்தியர்.
‘‘ஆளுடைப் பிள்ளையுமப்
பருங் கூடியிருந்தனு தினமும்
பேரிறை யிச் சட்டநாதனென
பரைசாற்றுதும் உலகோர்க்கே’’

என்னென்ன
வேண்டுமென்று பட்டியல் இடத் தேவை இல்லை. தேவை இவை என்றால், என்ன புண்ணியங்
கொண்டாய் என்று கேட்கும் இறைவர்கள் நிறையவே உண்டு. முன்னைய பிறவி பாவம்
அதனால் நீ அனுபவி துக்கத்தை என்பதே பெரும்பாலும் சித்தர்களும் ஜோதிடர்களும்
கூறும் கூற்று. ஆனால் எவ்வளவு பெரிய பாவி ஆனாலும், அவனை மன்னித்து, நன்மை
தரும் ஒரு கடவுள் குடி கொண்டிருக்கும் கோயில், இந்த சட்டநாதன் கோயில்.
இங்கு தொழுபவர்களை அனைத்து சித்தர்களும் தேவர்களும் இன்னபிற இறைவர்களும்
கண்டு கொண்டாடுகின்றனர். எனவே ஒருமுறையேனும் நாம் அனைவரும் சட்டநாதன்
சந்நதியில் நின்று தொழுது இன்புறுவோமே!
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum