தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அபிஷேக பலன்கள்

Go down

அபிஷேக பலன்கள் Empty அபிஷேக பலன்கள்

Post  gandhimathi Mon Jan 21, 2013 12:25 pm


* முருகப் பெருமான் வீற்றிருக்கும் ஆலயத்திற்கு சென்று அவருக்கு நல்லெண்ணையில் அபிஷேகம் செய்து பார்த்தால் நல்லனயாவும் நடைபெறும்.

* பசும்பாலால் அபிஷேகம் செய்து பார்த்தால் விசும்பும் வாழ்க்கை மாறி, வியக்கும் விதத்தில் ஆயுள் கூடும்.

* பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து பார்த்தால் பட்ட கடன்கள் தீரும்.

* பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்க்கும் செயல்கள் எல்லாம் வெற்றியாகம்.

* சர்க்கரையால் அபிஷேகம் செய்து பார்த்தால் சந்தித்தவர்களெல்லாம் நண்பர்களாக மாறுவர்.

* இளநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் இனிய சந்ததிகள் பிறகும்.

* எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் எம பயங்கள் தீரும்.

* மாம்பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வ நிலை உயரும்.

* திருநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் திக்கெட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிடைக்கும்.

* அன்னத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் அரசு வழி ஆதரவு நமக்கு கிடைக்கும்.

* சந்தனத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் சரும நோய் அததனையும் தீர்ந்தும் போகும்.

* பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார் போற்றும் செல்வாக்கு நமக்கு சேரும்.

* தேனாலே அபிஷேகம் செய்து பார்த்தால் தித்திக்கும் சங்கீதம் விருத்தியாகும்.

* சங்காலே அபிஷேகம் செய்து பார்த்தால் சகலவித பாக்யமும் நமக்கு கிடைக்கும்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum