தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாவட்டம் தோறும் ரசிகர்களைச் சந்திப்பார் ரஜினி-முத்துராமன் தகவல்

Go down

மாவட்டம் தோறும் ரசிகர்களைச் சந்திப்பார் ரஜினி-முத்துராமன் தகவல் Empty மாவட்டம் தோறும் ரசிகர்களைச் சந்திப்பார் ரஜினி-முத்துராமன் தகவல்

Post  ishwarya Wed Apr 17, 2013 2:00 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது புதிய அவதாரத்தை விரைவில் உலகுக்கு அறிவிக்கப் போகிறார்.

இத்தனை நாளும் தலைவர் தங்களைப் பார்ப்பாரா என ஏங்கிக் கிடந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் இனி மாவட்டம்தோறும் அவரே வந்து ரசிகர்களைச் சந்திக்கப் போகிறார்.

இந்த தகவலை ரஜினிக்கு மிக நெருக்கமான எஸ்பி முத்துராமன் நேற்று திருப்பூரில் அறிவித்தார்.

நடிகர் ரஜினி உடல் நலம் பெற்றுள்ளதை அடுத்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருப்பூரில் உள்ள சாமுண்டிபுரம் ரஜினிகாந்த் திருமண மஹாலில் நடந்தது.

சிறப்பு விருந்தினராக இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் கலந்து கொண்டு ஏழைகளுக்கு 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் அவர் பேசும்போது, “ரஜினி ரசிகர்களின் பொது நல சேவைகள் தொடர வேண்டும். அவர்கள் ரஜினியின் புகழ் பாடுவதை விட அவர் பெயரில் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

ரஜினிகாந்த் விரைவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் வந்து மாநாடு நடத்தி ரசிகர்களையும், பொது மக்களையும் நேரில் சந்தித்து பேசுகிறார்.

ரஜினியை தெய்வங்கள் காப்பாற்றியது என்று கூறுவதை விட ரஜினிக்காக சிறப்பு பூஜைகள், பிரார்த்தனை செய்த ரசிகர்கள்தான் தெய்வங்களாக நின்று காத்தார்கள். ரசிகர்களின் பிரார்த்தனையால்தான் ரஜினி குணமடைந்து உயிர் வாழ்கிறார்.

ரசிகர்கள் அனைவரும் மனம் மகிழும் வண்ணம் அவர் பல புதிய அறிவிப்புகளை வெளியிடவிருக்கிறார்,” என்றார்.

இந்த விழாவில் ரஜினியின் நண்பர் ராஜ்பகதூரும் பங்கேற்றார்.

சென்னை தலைமை மன்ற நிர்வாகி என் ராமதாஸ், பெங்களூரிலிருந்து கோபிநாத் ராவ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினி மாவட்டம் தோறும் ரசிகர்களை சந்திக்க முடிவு
» ‘ரஜினி உங்களைச் சந்திப்பார்… ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்!’ – லதா ரஜினி
» ஏழைகளுக்காக ரஜினி கட்டும் புதிய மருத்துவனை – அண்ணன் சத்யநாராயணா தகவல்
» டெலிபோனில் பேசினார்: ரஜினி 1 1/2 மாதத்தில் சென்னை திரும்புவார்; இயக்குனர் ஷங்கர் தகவல்
» சினிமாவில் ஒற்றுமை இல்லை எஸ்.பி.முத்துராமன் வேதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum