தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழுக்கு தம்பி இந்திக்கு அண்ணன் !

Go down

 தமிழுக்கு தம்பி இந்திக்கு அண்ணன் ! Empty தமிழுக்கு தம்பி இந்திக்கு அண்ணன் !

Post  ishwarya Tue Apr 16, 2013 5:12 pm

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் ‘ரத்த சரித்திரம்’ படம் மூலம் இந்தி திரையுலகிற்கு அறிமுகமாகி தனது நடிப்பின் மூலம் இந்தி திரையுலக ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார் சூர்யா.

தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சிங்கம்’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. சூர்யா நடிப்பில் ‘அயன்’ படத்தின் ரீமேக் உரிமைக்கும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஏழாம் அறிவு’ படத்தை இந்தியில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறார்கள்.

தனது படங்களின் ரீமேக் படங்களின் வெற்றியும், தனக்கு இருக்கும் இந்தி மார்க்கெட்டையும் பார்த்த சூர்யா தற்போது நேரடியாக இந்தி படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

அதற்கு அவர் தேர்ந்தெடுத்த கதை அவரது தம்பி கார்த்தி நடிப்பில் வெளியான ‘பையா’. கார்த்தி, தமன்னா நடிப்பில் யுவன் இசையமைக்க, லிங்குசாமி இயக்கிய ‘பையா’ வரவேற்பைப் பெற்றது.

அப்படத்தின் இசையும் காட்சியமைப்புகளும் இங்கு வரவேற்பை பெற்றதால், அப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் சூர்யா.

சூர்யாவுடன் யார் நடிக்கிறார்கள். இயக்குனர் யார், தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum