தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அரசியல் வேறு; பிசினஸ் வேறு: லாஜிக் பேசும் ராதிகா!

Go down

அரசியல் வேறு; பிசினஸ் வேறு: லாஜிக் பேசும் ராதிகா! Empty அரசியல் வேறு; பிசினஸ் வேறு: லாஜிக் பேசும் ராதிகா!

Post  ishwarya Tue Apr 16, 2013 11:47 am

சன் பிக்சர்ஸ் சார்பில் வெளியிடப்பட்ட ‘மங்காத்தா’ படத்தை ராதிகாவின் ராடன் டி.வி நிறுவனம்தான் திரையரங்குகளில் வெளியிட்டது. வரப்போகும் ’7-ம் அறிவு’ படத்தைக்கூட இதே பாணியில் வெளியிடப் போவதாக செய்திகள் கசிகின்றன. ஒருபுறம் திமுகவை எதிர்க்கிறார் சரத்குமார். இன்னொருபுறம் அதே திமுக குடும்பத்தினர் தயாரித்த படங்களை அவரது மனைவி ராதிகா திரையிடுகிறார். இதென்ன முரண்பாடு என்ற கேள்வி எழுந்திருக்கிறது திரையுலகத்தில். இது குறித்து தெளிவாகவே விளக்கம் அளித்திருக்கிறார் ராதிகா. அரசியல் வேறு; பிசினஸ் வேறு என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

என்னை பற்றி அம்மாவுக்கு நல்லா தெரியும். அவங்களுக்கு நிறைய வேலை இருக்கு. இதுவரை அவங்க தரப்பிலிருந்து எங்கிட்ட யாரும் எதுவும் கேட்கலை. தொழில்ல கோடிக்கணக்கில் முதலீடு போடறவங்க நஷ்டம் வந்திடக் கூடாதுன்னுதான் நினைப்பாங்க. திரைப்படத்துக்கு அந்த லாஜிக் பொருந்தும்தானே. அது யாரோட படம். அதன் பின்னணி என்பதை பற்றியெல்லாம் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கிறது வேஸ்ட்.

இது ஒரு பிராசஸ்டு வென்ச்சர். எங்கள் நிறுவனம் மூலமா படத்தை வெளியிடுறீங்களான்னு கேட்டாங்க. நான் சரின்னு ஒத்துக்கிட்டேன். அவ்வளவுதான். நான் முன்பே சொன்னது போல அதனை பிசினஸ் ரீதியாக மட்டுமே பார்க்கிறேன். சந்தேகம் தீர்ந்ததா?

நடிப்புல ஊறி அரசியல்ல மிதந்து பிஸினெஸ்ல முத்தெடுக்கிற தம்பதியாச்சே……..!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum