தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒரு நடிகையின் வேதனை !

Go down

ஒரு நடிகையின் வேதனை ! Empty ஒரு நடிகையின் வேதனை !

Post  ishwarya Tue Apr 16, 2013 11:30 am


திரையுலகில் ஒரு நடிகையின் வாழ்க்கை எவ்வாறு அமைகிறது என்பதை கூறும் படம் ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’. சோனியா அகர்வால் இப்படத்தின் அஞ்சலி என்ற பெயருள்ள நடிகையாக நடித்து வருகிறார்.

இப்படத்தினை இப்போது ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘நர்த்தகி’ போன்ற படங்களைத் தயாரித்த ‘புன்னகைப்பூ’ கீதா தயாரித்து வருகிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் ராஜ்கிருஷ்ணா ” நடிகையாவதற்கு முன்பும், நடிகையான பின்பும் அவர்கள் சந்திக்கும் நல்லது, கெட்டதுகளை ஒரு நடிகையின் வாக்குமூலமாகவே பதிவு செய்கிறோம்.

நடிகையான பிறகு நடிகைகளின் புகழையும், புன்னகையையும் மட்டுமே நம்மால் உணர முடிகிறது. ஆனால் அவர்களின் வலிகளும் வேதனைகளும் நிறைந்த இன்னொரு பக்கம் பற்றி நம்மால் உணரமுடியாமல் போய் விடுகிறது.

இந்த படம் நிச்சயமாக ஆபாசமோ, விரசமோ இல்லாத ஒரு நல்ல படமாக இருக்கும். தயாரிப்பாளர் ‘புன்னைகைப் பூ’ கீதாவும் ஒரு பெண் என்பதால் தரமான கதை, நல்ல படம் என்கிற வரைமுறையை மீறி எடுக்க விட மாட்டார் ” என்று கூறீயுள்ளார்.

இப்படத்தினை தயாரிப்பது மட்டுமல்லாமல் படத்தில் ஒரு பத்திரிகையாளர் வேடத்தில் நடித்து இருக்கிறார் ‘புன்னகை பூ’ கீதா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum