தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏ.ஆர்.முருகதாசின் திமிர்? – அசர வைத்த ஆடியோ விழா

Go down

ஏ.ஆர்.முருகதாசின் திமிர்? – அசர வைத்த ஆடியோ விழா Empty ஏ.ஆர்.முருகதாசின் திமிர்? – அசர வைத்த ஆடியோ விழா

Post  ishwarya Fri Apr 12, 2013 5:43 pm



எதையும் கொண்டாடி தீர்ப்பது என்ற வெறியோடு திரண்ட ரசிகர்களின் மனசை தங்கத் தோல் நடிகைகள் கன்னக் கோல் போட்டு களவாடிக் கொண்டிருந்தார்கள். இடம் 7 ஆம் அறிவு படத்தின் பாடல் வெளியீட்டு விழா. அஞ்சலி, ருக்மணி, லட்சுமிராய், அபிநயா என்று இத்தகைய நடிகைகள் போட்ட ஆட்டம் ஒருபுறம் ரசிகர்களை மிதக்க விட்டது என்றால், அப்படத்தின் ட்ரெய்லர் அவ்வளவு ரசிகர் கூட்டத்தையும் சுருட்டி தன் விஷூவலுக்குள் வைத்துக் கொண்டது.

ஒரு மதயானையை புரட்டி எடுத்த அங்குசத்தின் எளிமையுடனும் பெருமையுடனும் மேடையில் ஏறினார் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருதாஸ். பேச்சில் மட்டும் வழக்கத்தை விடவும் காரம்!

நான் சூர்யாவிடம் கதை சொல்லும்போதே இது மாதிரி இன்னொரு படத்தை நீங்க செய்யணும்னா குறைஞ்சது அஞ்சு வருஷமாவது ஆகணும். இந்த ஒரு படத்தில் ஏறி அடிச்சிடணும் என்றேன். அதுக்கு ஏற்ற மாதிரி இந்த படத்திற்கு செலவு செய்திருக்கிறார் உதயநிதி. முதல் பதினைந்து நிமிடம் வருகிற காட்சிகளுக்கு மட்டும் ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி செலவு செஞ்சிருக்கார்.

நமது காஞ்சிபுரத்திற்கும் சைனாவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்தது. ’சில்க் வே’ என்பார்கள் அதை. இங்கிருந்து பட்டுத்துணிகள் சைனாவுக்கு செல்லும். அங்கிருந்து பட்டு நுல்கள் இங்கே வரும். ஆனால் அதையும் தாண்டி இங்கிருந்து என்னென்ன சைனாவுக்கு போனது என்பதையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன். க்ளைமாக்சில் ஒரு பாடல் வைத்திருக்கிறோம். உலக தமிழர்கள் ஒவ்வொருவரும் கொண்டாடணும்னு நினைச்சு நினைச்சு எழுதியது அந்த பாடல். க்ளைமாக்சில் வருகிற பாடல் என்பதால் ரொம்பவே சிரத்தை எடுத்து மியூசிக் போட்டிருக்கார் ஹாரிஸ். இந்த பாடலை உலகத்தின் எந்த மூலையில் இருக்கிற தமிழனும் கொண்டாடியே தீர வேண்டும். அப்படி வந்திருக்கு.

இந்த படத்தை நான் பார்த்ததும் எனக்குள்ளே ஒரு கர்வம் வந்தது. ஒரு திமிர் வந்தது. ஒரு டைரக்டர் என்ற என்கிற திமிரல்ல அது. ஒரு தமிழன் என்கிற திமிர் அது. இப்ப எங்கிட்ட இருக்கிற அந்த திமிர், ரிலீசுக்கு பின்னாடி உங்களுக்கு வரும் என்றார் முருகதாஸ்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum