தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபல தயாரிப்பாளரை சந்திக்க மறுத்ததால் மலையாளத்தில் நடிக்க நித்யா மேனனுக்கு தடை!

Go down

பிரபல தயாரிப்பாளரை சந்திக்க மறுத்ததால் மலையாளத்தில் நடிக்க நித்யா மேனனுக்கு தடை! Empty பிரபல தயாரிப்பாளரை சந்திக்க மறுத்ததால் மலையாளத்தில் நடிக்க நித்யா மேனனுக்கு தடை!

Post  ishwarya Fri Apr 12, 2013 4:31 pm

பிரபல மலையாளத் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப்பை நேரில் சந்தித்துப் பேச மறுத்ததால் முன்னணி நடிகை நித்யா மேனனுக்கு மலையாளத்தில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார் நித்யா மேனன். தமிழில் 180, வெப்பம் போன்ற படங்களில் நடித்துள்ளார். கேரள திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரும் மம்முட்டியின் நண்பருமான ஆண்டோ ஜோசப் ஒரு படத்தில் நித்யா மேனனை ஒப்பந்தம் செய்ய விரும்பினார்.

எனவே நித்யா நடித்துக் கொண்டிருந்த மலையாள பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று நித்யா மேனனை சந்தித்துப் பேச விரும்பினார் ஆண்டோ ஜோசப். இந்த தகவல் நித்யாமேனனிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆண்டோ ஜோசப்பை சந்திக்க நித்யாமேனன் மறுத்து விட்டார். எதுவாக இருந்தாலும் எனது மானேஜரிடம் பேசுங்கள் என்று கூறிவிட்டாராம்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆண்டோ ஜோசப் இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தார். மூத்த தயாரிப்பாளரை அவமதித்ததாக நித்யா மேனனுக்கு தயாரிப்பாளர் சங்கம் நடிக்க தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சுரேஷ்குமார், பிறப்பித்துள்ளார்.

இதேபோல தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிக்குமாறு அந்தந்த மாநில தயாரிப்பாளர் சங்கத்துக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நித்யா மேனனுக்கு ‘ஷாக்’ கொடுத்த ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன்-’பியூஸ்’ போய் திரும்பினார்!
» விமலுடன் நடிக்க லட்சுமி மேனனுக்கு தடைபோட்டாரா பிரபு சாலமன்?
» ஸ்ரீப்ரியாவின் இயக்கத்தில் நடிக்க தயங்கிய நித்யா மேனன்
» விஸ்வரூபம் படத்தில் பிரபல நடிகர்களை நடிக்க வைக்காதது ஏன்? : கமல்ஹாசன் பதில்
» தயாரிப்பாளரை ‘தம்’ கட்ட வைத்த முமைத்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum