தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரதோஷ பூஜையில் செய்ய வேண்டியவை

Go down

பிரதோஷ பூஜையில் செய்ய வேண்டியவை Empty பிரதோஷ பூஜையில் செய்ய வேண்டியவை

Post  gandhimathi Sun Jan 20, 2013 2:32 pm

நந்தி தேவருக்கு அபிஷேகம் செய்யும் போது எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்றவை தரலாம். அபிஷேகம் முடிந்த பின் அருகம்புல் பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது நமக்கு நன்மை தரும். உற்சவமூர்த்திக்கு பூஜையின் போது பால், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் இவற்றினைத் தரலாம்.

உற்சவ மூர்த்திக்கான பூஜையின் போது நமது அணிகலன்களை (நகைகளை) உற்சவமூர்த்திக்கு அணிவித்து தீபாராதனை முடிந்த பின்னர் நகையை அணிந்து கொண்டால் நன்மை பல நமக்கு கிடைக்கும். நந்திதேவரது தீபாராதனைக்குப் பிறகு மூலவருக்கு நடக்கும் தீபாராதனையை நந்தி தேவரது இரண்டு கொம்புகளுக்கு இடையே பார்த்தால் சகல தோஷமும், பாவமும் நீங்கும்.

மூலவரது தீபாராதனை முடிந்த பின்பு நந்திகேஸ்வரரது காதில் பிறர் கேட்காதவாறு நம்முடைய குறைகளையம், கோரிக்கைகளையும் அவரிடம் கூறுதல் வேண்டும். இவ்வாறு பன்னிரெண்டு பிரதோஷ காலங்கள் வரை கூறி வந்தால் நீங்கள் நினைத்தது நிச்சயம் நடக்கும்.

நந்திகேஸ்வரருக்கு நைவேத்தியமாக பச்சரிசியுடன் வெல்லம் கலந்து வைத்து வழிபாட்டிற்குப் பிறகு எல்லாருக்கும் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பதாலோ அல்லது கொடுப்பதை வாங்கி சாப்பிடுவதாலோ நமது தோஷங்கள் தொலையும்.

நந்திதேவர் மற்றும் உற்சவர், மூலவர் ஆகியோருக்கு தீபாராதனை செய்யும்போது இறைவனின் திருநாமங்களையும், சிவபுராணப் பாடல்களையும் பாடுதல் வேண்டும். இவ்வாறு பக்தியுடன் பாடுவதால் தோஷம், பாவம், கஷ்டம் நீங்கி நன்மை பல பெறலாம்.

முக்கியமாக பிரதோஷ நாளன்று உபவாசம் இருந்து கடவுளை வழிபட வேண்டும். தரிசனம் முடிந்த பின்னர் பால், பழம் அருந்தி வெறும் தரையில் படுத்து உறங்கினால் பிரதோஷத்திற்கான முழு பலன் கிட்டும்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum