தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யாருக்கு வர்த்தக யோகம் கிடைக்கும்?

Go down

யாருக்கு வர்த்தக யோகம் கிடைக்கும்? Empty யாருக்கு வர்த்தக யோகம் கிடைக்கும்?

Post  gandhimathi Sun Jan 20, 2013 1:40 pm




நவ கிரகங்களில் சந்திரன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள், வர்த்தக கிரகங்கள் ஆகும். வர்த்தகத்தில் உயர்வு காண இந்த கிரகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது ஆகும். பொதுவாக ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம் ஆகிய ராசிக்காரர்கள் வியாபாரம் செய்யும் பட்சத்தில் முழுமையான வெற்றி காணலாம்.

ஒரு ஜாதகத்தில் லக்னத்துக்கு 4ம் இடத்தில் சந்திரன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் பலம் பெற்று வீற்று இருக்கும் பட்சத்தில் ஜாதகர் வியாபாரம் செய்வதில் விருப்பம் உள்ளவராகவும், வல்லுநர் ஆகவும் லாபம் ஈட்டுபவராகவும் இருப்பர்.

ஆனால் லக்னத்துக்கு 10ம் இடத்தில் இந்த ஜாதகங்கள் இருக்க ஜாதகர் வியாபாரம் செய்யும் பட்சத்தில் வியாபரத்தில் வெற்றி என்பது அரிதாகும். மேலும் சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் பலமிழந்தாலும் ஜாதகர் வியாபாரத்தில் விருத்தி காண்பது கடினமாகும். பொதுவாக வியாபாரம் செய்து வருபவர்கள் தவறாமல் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

திருப்பதி ஏழுமலையானை வழிபடுவது நல்லது. முடிந்தால் திருப்பதி ஸ்தலத்துக்கும் சென்று வருவது நல்லது. வியாபாரம் செய்து வருபவர்கள் உங்கள் ஸ்தாபனங்களில் குபேரயந்திரத்தை வைத்து பூஜை செய்து வழிபடுவதன் மூலம் முழுமையான லாபத்தை அடையலாம். குபேரன், பூராடம் நட்சத்திரம், தனுசு ராசியில் பிறந்ததாக சொல்லப்படுகிறது.

மேலே கண்ட ஜாதகத்தை ஒரு தங்க தகட்டிலோ அல்ல வெள்ளி தகட்டிலோ எழுதி வைத்து வழிபடுவது நல்லது. வியாழக்கிழமை தோறும் இந்த ஜாதகத்துக்கு பூஜைகள் செய்து வருவதன் மூலம் வர்த்தகத்தில் முன்னேற்றம் பெறலாம். வியாழக்கிழமையும், பூசம் நட்சத்திரமும் இணைந்து வருகின்ற நாளில் குபேர ஜாதகத்தை வழிபட்டு வந்தால் இன்பமான வாழ்வை பெறலாம்.

பெரிய மனிதர்களின் சேர்க்கையும், செல்வமும், வளமும், ஆடம்பர வாழ்க்கையும் கிட்டும்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum