தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

“தமிழ் படங்களில் மீண்டும் நடிப்பேன்” – தமன்னா

Go down

“தமிழ் படங்களில் மீண்டும் நடிப்பேன்” – தமன்னா Empty “தமிழ் படங்களில் மீண்டும் நடிப்பேன்” – தமன்னா

Post  ishwarya Wed Apr 10, 2013 5:03 pm

தமிழில் முன்னணி நடிகையான தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் திடீரென குறைந்துள்ளது. சூர்யாவுடன் அயன், தனுசுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, விஜய்யுடன் சுறா ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி என ஒரு ரவுண்டு வந்தார். அவர் கடைசியாக தனுஷ் ஜோடியாக வேங்கையில் நடித்தார்.

தற்போது தெலுங்கில் ராச்சா, எந்து கண்டே பிரேமந்தா, லிபெல் என மூன்று படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படங்கள் கைவசம் இல்லை. தமிழ் திரையுலகை விட்டு ஒதுங்கி விட்டீர்களா என தமன்னாவிடம் கேட்ட போது மறுத்தார். அவர் கூறியதாவது:-

தமிழ் பட உலகை விட்டு நான் ஒதுங்கவில்லை. தெலுங்கில் நடித்து ரிலீசான படங்கள் ஹிட்டானதால் நிறைய பட வாய்ப்புகள் வந்தன. மூன்று படங்களில் பிசியாக நடித்து வருகிறேன். விரைவில் தமிழ் படமொன்றிலும் ஒப்பந்தமாக இருக்கிறேன். சினிமாவில் வெற்றி தோல்வி சகஜம் ஏற்றம் இறக்கம் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பதை புரிந்து வைத்துள்ளேன். கடினமாக உழைத்தால்தான் வெற்றி கிடைக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum