தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கெட்டப்பை மாத்தினார் ‘விஸ்வரூப’ கமல்

Go down

கெட்டப்பை மாத்தினார் ‘விஸ்வரூப’ கமல் Empty கெட்டப்பை மாத்தினார் ‘விஸ்வரூப’ கமல்

Post  ishwarya Wed Apr 10, 2013 4:48 pm

விஸ்வரூபம்’ படத்திற்காக பரபரப்பாக பணியாற்றி வருகிறார் கமல். படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து கூட அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளிவராமல் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

படத்தில் ஒரு பாத்திரத்திற்காக புது கெட்டப்பில் இருப்பதால், திரையுலக விழாக்களில் கலந்து கொள்வதைக் கூட தவிர்த்தார். தனது மகள் ஸ்ருதிஹாசன் தமிழில் நாயகியாக அறிமுகமான ‘ஏழாம் அறிவு’ இசை வெளியீட்டு விழாவில் கூட கலந்து கொள்ளவில்லை.

தனக்கென ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஏழாம் அறிவு’ படத்தின் ஷோவில் கூட புகைப்படக்காரர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை கமல். தற்போது அந்த பாத்திரத்திற்கான படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். அந்த கெட்டப்பை மாற்றிவிட்டதால், பி.வாசு மகனின் (சக்தி) திருமண வரவேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாராம் கமல்.

விரைவில் ‘விஸ்வரூபம்’ படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு பறக்க இருக்கிறது படக்குழு. இப்படத்தின் பாடல்களுக்காக முழுப் படக்கதையையும் வைரமுத்துவிடம் கூறினாராம் கமல். கதையை கேட்டு வியந்துபோனாராம் வைரமுத்து. படத்திற்கு ஷங்கர் – இஸான் – லாய் இசையமைக்க இருக்கிறார்கள்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum