தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திமுக தோற்கவில்லை, மக்கள்தான் தோற்று விட்டனர் – குஷ்பு மீண்டும் கருத்து

Go down

திமுக தோற்கவில்லை, மக்கள்தான் தோற்று விட்டனர் – குஷ்பு மீண்டும் கருத்து Empty திமுக தோற்கவில்லை, மக்கள்தான் தோற்று விட்டனர் – குஷ்பு மீண்டும் கருத்து

Post  ishwarya Tue Apr 09, 2013 5:18 pm

தேர்தல் முடிவு வெளியானபோதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன், திமுக தோற்கவில்லை, தோற்கடிக்கவும் முடியாது. மக்கள்தான் தோற்று விட்டனர் என்று மீண்டும் கூறியுள்ளார் திமுக நடிகை குஷ்பு.

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவு குறித்து அது வெளியானபோது கருத்து கேட்ட செய்தியாளர்களிடம் இது மக்களின் தோல்வி, திமுகவின் தோல்வி அல்ல என்று கூறினார் குஷ்பு. இதையடுத்து அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. மக்கள் தீர்ப்பை குஷ்பு அவமதித்து விட்டதாக கூறி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மீண்டும் அதே போல பேசியுள்ளார் குஷ்பு. சென்னை தி.நகர் பஸ் நிலையத்தில் நேற்று நடந்த திமுக கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்டு குஷ்பு பேசுகையில், தலைமைச்செயலகத்தை வாஸ்து பார்த்து ஒதுக்கி வச்சுட்டாங்க. அதனால அங்கே போக மறுக்கிறாங்க.

எதுக்கெடுத்தாலும் மருத்துவமனை கட்டுகிறேன் என்று சொல்கிறாங்க. மருத்துவமனை மீது அவருக்கு திடீருன்னு அப்படி என்ன ஆசை வந்துவிட்டது என்று தெரியவில்லை.

ஆட்சியில் இல்லாதபோதுதான் கொடநாடு போய் ஓய்வு எடுத்தாங்க. ஆட்சியில் இருக்கும்போதும் கொடநாடு போய் ஓய்வு எடுக்கிறாங்க. மாற்றம் வேண்டும் என்று மக்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில் ஓட்டுப் போட்டாங்க. ஆனா, அவுங்க தலையில பாறாங்கல்லை தூக்கிப்போட்டுட்டாங்க.

ஏன் இந்த கொலைவெறி – இதுதான் தமிழக மக்கள் முதல்வர் ஜெயலலிதாவை பார்த்துக் கேட்கும் கேள்வி. திமுக என்றைக்குமே தோற்காது. மக்கள்தான் தோற்று விட்டார்கள். இதைத்தான் நான் வாக்கு எண்ணிக்கை முடிவின்போதே சொன்னேன் என்று கூறினார் குஷ்பு

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கனி‌மொழிக்கு நெருக்கடி! குஷ்பு பரபரப்பு கருத்து!!
» கற்பு குறித்த நீதிபதிகளின் கருத்து – சுப்ரீம் கோர்ட்டில் 5 மணி நேரம் அமர்ந்து கேட்ட குஷ்பு
» ராம்சிங் மரணம் : மீண்டும் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக நண்பர் கருத்து
» ருத்ராட்சத்தில் ப்ளாஸ்டிக் தாலி… மீண்டும் சர்ச்சையில் குஷ்பு!
» என் படங்கள் தோற்று இருந்தால் “விமான பணிப்பெண் ஆகி இருப்பேன்” – தமன்னா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum