தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நித்யா மேனன் படங்களுக்கு தடை!

Go down

நித்யா மேனன் படங்களுக்கு தடை! Empty நித்யா மேனன் படங்களுக்கு தடை!

Post  ishwarya Mon Apr 08, 2013 12:40 pm

மூத்த தயாரிப்பாளர் ஒருவரை அவமதிப்பு செய்ததற்காக நடிகை நித்யா மேனன் படங்கள் மலையாளத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. வெப்பம், 180 போன்ற படங்களில் நடித்தவர் நடிகை நித்யா மேனன். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது மலையாளத்தில் “தற்சமயம் ஒரு பெண்குட்டி” மற்றும் “உஸ்தட் ஹோட்டல்” போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் இவரது படைத்தை திரையிட மாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

சில மாதங்களுக்கு மூத்த தயாரிப்பாளர் ஒருவர் படம் விஷயம் தொடர்பாக நித்யா மேனனை சந்தித்து பேச விரும்பினார். ஆனால் அவரை சந்திக்க நித்யா மறுத்துவிட்டார். இ‌தனையடுத்து மூத்த தயாரிப்பாளரை அவமதித்துவிட்டதாக கூறி நித்யா மேனன் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இந்நிலையில் நித்யாவின் இந்த இரண்டு படங்கள் இப்போது ரிலீசாகும் நிலையில் இந்த தடை உத்தரவால் தியேட்டர் அதிபர்கள் படத்தை திரையிட மறுத்துள்ளனர். இதனால் நித்யாவின் படங்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

இதனிடையே இப்பிரச்னையை தீர்க்க மலையாள நடிகர் சங்கம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum