தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர்–நடிகைகள் உண்ணாவிரதம்

Go down

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர்–நடிகைகள் உண்ணாவிரதம்  Empty இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர்–நடிகைகள் உண்ணாவிரதம்

Post  amma Fri Apr 05, 2013 5:18 pm



இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, சென்னையில் நேற்று நடிகர்–நடிகைகள் உண்ணாவிரதம் இருந்தார்கள். அதில், ரஜினிகாந்த்–கமல்ஹாசன் உள்பட ஏராளமான நடிகர்–நடிகைகள் கலந்து கொண்டார்கள்.

தமிழர்கள் படுகொலை

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரில், அப்பாவி தமிழர்களை சிங்கள ராணுவம் சுட்டு கொன்றது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலகன் பாலச்சந்திரனை ராணுவ பதுங்கு குழியில் பிடித்து வைத்து சுட்டுக் கொன்ற சம்பவம், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. தமிழக சட்டசபையிலும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும், ஈழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தவும் கோரி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

போராட்டம்

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், சிங்கள ராணுவத்தின் போர் குற்றங்களை கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழ் திரையுலகமும் போராட்டத்தில் குதித்து இருக்கிறது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் 2 வாரங்களுக்கு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அதில் சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டார்கள்.

நடிகர்–நடிகைகள் உண்ணாவிரதம்

இதைத்தொடர்ந்து நடிகர்–நடிகைகள் நேற்று உண்ணாவிரதம் இருந்தார்கள். சென்னை தியாகராய நகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில், இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இதற்காக, 140 அடி நீளம்–60 அடி அகலத்தில் சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகிய மூவரும் அங்கு வந்தார்கள். அவர்களை தொடர்ந்து நடிகர் சிவகுமார், அவருடைய மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகிய மூன்று பேரும் உண்ணாவிரத பந்தலில் வந்து அமர்ந்தார்கள்.

ரஜினிகாந்த்–கமல்ஹாசன்

உண்ணாவிரதத்துக்கு சரத்குமார் தலைமை தாங்கினார். ராதாரவி, வாகை சந்திரசேகர், துணைத்தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில், ரஜினிகாந்த்–கமல்ஹாசன் ஆகிய இருவரும் பங்கேற்றார்கள். உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட மற்ற நடிகர்–நடிகைகள் வருமாறு:–

அஜீத், விக்ரம், ஜெயம் ரவி, சிலம்பரசன், ஜீவா, விஷால், தனுஷ், ஸ்ரீகாந்த், ஆர்யா, சத்யராஜ், பிரபு, பாக்யராஜ், அர்ஜுன், பிரசாந்த், பரத், உதயநிதி ஸ்டாலின், அருண் விஜய், அப்பாஸ், விக்ரம் பிரபு, சிபிராஜ், ஷக்தி, சாந்தனு, விஷ்ணு, ஜித்தன் ரமேஷ், அதர்வா, ராகவா லாரன்ஸ், உதயா, பிருதிவிராஜ், சிவகார்த்திக்கேயன், ராஜ்கிரண், நாசர், மோகன், பிரகாஷ்ராஜ், பாண்டியராஜன், தியாகராஜன், ராஜேஷ், சரவணன், கருணாஸ், எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன், செந்தில், விவேக், சார்லி, சின்னி ஜெயந்த், கஞ்சா கருப்பு, ரமேஷ்கண்ணா, மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், பவர் ஸ்டார் சீனிவாசன், ஸ்ரீமன், எம்.எஸ்.பாஸ்கர், சூரி, நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ், வினுசக்ரவர்த்தி, கே.ராஜன், வையாபுரி, வி.எஸ்.ராகவன், பூவிலங்கு மோகன்,

நடிகைகள்

நடிகைகள் ராதிகா சரத்குமார், திரிஷா, நமீதா, லட்சுமிராய், வரலட்சுமி, சோனியா அகர்வால், சோனா, தன்ஷிகா, மோனிகா, தேவயானி, ரேகா, ரம்யா கிருஷ்ணன், கஸ்தூரி, அம்பிகா, லிசி பிரியதர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், லட்சுமி ராமகிருஷ்ணா, பாத்திமாபாபு, ஊர்வசி, கோவை சரளா, ஷகிலா, சத்யப்ரியா,

கவிஞர் வைரமுத்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் பி.எல்.தேனப்பன், பொருளாளர் எஸ்.தாணு, ‘பிலிம்சேம்பர்’ தலைவர் கல்யாண், ‘பெப்சி’ தலைவர் அமீர், பட அதிபர்கள் முக்தா சீனிவாசன், கேயார், எடிட்டர் மோகன், சித்ரா லட்சுமணன், ருக்மாங்கதன், ‘பெப்சி’ எஸ்.விஜயன், ஏ.எல்.அழகப்பன், கபார், டைரக்டர்கள் பி.வாசு, வசந்த், ஆர்.கே.செல்வமணி, டி.பி.கஜேந்திரன், சந்தானபாரதி, கே.நட்ராஜ், ஈ.ராம்தாஸ், கவுதமன், ஸெல்வன், கணேஷ் பாபு, கவிஞர்கள் பிறைசூடன், சினேகன், டான்ஸ் மாஸ்டர்கள் சுந்தரம், ரகுராம் மற்றும் ஏராளமான திரையுலக கலைஞர்கள் கலந்து கொண்டார்கள்.

படப்பிடிப்பு ரத்து

மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் முடிவடைந்தது. சென்னை லயோலா கல்லூரி மாணவர் ஜோ பிரிட்டோ, சட்ட கல்லூரி மாணவர் தனசேகர் ஆகிய இருவரும் நடிகர்–நடிகைகளுக்கு பழச்சாறு கொடுத்து, உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்கள்.

நடிகர்–நடிகைகளின் உண்ணாவிரதத்தையொட்டி நேற்று தமிழ் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. வெளியூர்களிலும் படப்பிடிப்பு நடைபெறவில்லை. ஸ்டூடியோக்களில் எடிட்டிங், டப்பிங் போன்ற பணிகளும் நிறுத்தப்பட்டன.

ரசிகர்கள் திரண்டனர்

நடிகர்–நடிகைகளை பார்ப்பதற்காக, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நடிகர் சங்க வளாகம் முன்பு திரண்டு நின்றார்கள். அவர்கள், உண்ணாவிரதம் இருந்த நடிகர்–நடிகைகளை வரிசையாக சென்று பார்ப்பதற்காக, சவுக்கு கட்டை தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.

பந்தலை சுற்றிலும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் உடல்கள் குவியல் குவியலாக கிடப்பது போல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

உண்ணாவிரத பந்தலுக்கு உள்ளேயும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஏப்.2-ல் உண்ணாவிரதம்: தென்னிந்திய நடிகர் சங்கம்
» தமிழர்களை சந்திக்க நடிகர், நடிகைகள் இலங்கை பயணம்?
» அன்னா ஹசாரேக்கு ஆதரவாக நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்
» இலங்கை அரசை கண்டித்து நடிகர் நடிகைகள் உண்ணாவிரதம்: ரஜினி-கமல் கலந்து கொள்கிறார்கள்.
» இலங்கை அரசுக்கு எதிராக தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் செவ்வாய்கிழமை உண்ணாவிரதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum