தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதலன் மர்ம மரணம்! அல்போன்சாவிடம் விசாரணை துவக்கம்!!

Go down

காதலன் மர்ம மரணம்! அல்போன்சாவிடம் விசாரணை துவக்கம்!! Empty காதலன் மர்ம மரணம்! அல்போன்சாவிடம் விசாரணை துவக்கம்!!

Post  ishwarya Fri Apr 05, 2013 2:36 pm

காதலன் வினோத்குமார் மரணம் தொடர்பாக, நடிகை அல்போன்சாவிடம்
விருகம்பாக்கம் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.கடந்த 4ம் தேதி, சென்னை
விருகம்பாக்கம் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில், நடிகை அல்போன்சாவின்
காதலன் வினோத்குமார் இறந்தார். இந்த மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதனால்,
நடிகை அல்போன்சாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என, போலீஸ் கமிஷனர்
திரிபாதியிடம் வினோத்குமாரின் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், காதலன் இறந்த துக்கம் தாங்க முடியாமல், தூக்க மாத்திரைகளை
விழுங்கி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள
நடிகை அல்போன்சாவிடம், விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சிதானந்தம்
விசாரணையை துவங்கியுள்ளார்.

கொலையா, தற்கொலையா?முதற்கட்டமாக நடிகை அல்போன்சா மற்றும் அவரது
வீட்டுக்கு வந்து செல்வோர், உறவினர்கள், வினோத்குமார் இறந்த அடுக்கு மாடி
குடியிருப்பில் வசிப்பவர்கள், காவலாளிகள் என, பல்வேறு தரப்பினரிடம் விசாரணை
நடக்கிறது.இருப்பினும், வினோத்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்
தான், கொலையா, தற்கொலையா என்பது தெரியவரும் என, போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலும், போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், வினோத்குமாரின் பெற்றோர் தந்த
புகார் மனு, வடபழனி போலீஸ் உதவி கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum