தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இப்போதைக்கு சினிமாவில் நடிக்க மாட்டேன்: ஐஸ்வர்யாராய்

Go down

இப்போதைக்கு சினிமாவில் நடிக்க மாட்டேன்: ஐஸ்வர்யாராய் Empty இப்போதைக்கு சினிமாவில் நடிக்க மாட்டேன்: ஐஸ்வர்யாராய்

Post  ishwarya Wed Apr 03, 2013 12:31 pm

முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யாராய், அமிதாப்பச்சன் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார்.

தற்போது 38 வயதாகும் ஐஸ்வர்யாராய், குழந்தை மற்றும் கணவர் அபிஷேக் பச்சனுடன் லண்டன் சென்றுள்ளார். இந்திய வம்சாவழி இங்கிலாந்து எம்.பி. அளித்த விருந்தில் கலந்து கொள்வதற்காக, அவர்கள் லண்டன் சென்றுள்ளனர்.

அங்கு ஐஸ்வர்யாராய் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் ஒரு குழந்தைக்கு தாயாக இருப்பதில் ஆனந்தம் அடைகிறேன். எனவே, இப்போதைக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை. சினிமாவை பற்றிய சிந்தனையை ஒத்தி வைத்து விட்டேன். எதிர்காலத்தில் எப்படிப்பட்ட ரோலில் நடிப்பேன் என்று சொல்ல முடியாது.

எனது வாழ்க்கையில் சிறப்பான தினம் எது என்றால், அது அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட நாள்தான். இந்த திருமண பந்தம் திடீரென ஏற்பட்டதுதான். எங்களுக்குள் இயற்கையான உறவு உள்ளது. அதை மேலும் மேம்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு ஐஸ்வர்யாராய் கூறினார்.

உடனிருந்த அபிஷேக் பச்சன் கூறியதாவது:-

எனது குழந்தையுடன் போதிய நேரத்தை நான் செலவிடவில்லை. குழந்தையின் எல்லா தேவைகளையும் ஐஸ்வர்யாவே நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் நான் தவறு இழைத்தவன் ஆகிறேன்.

அன்றாடம் நாம் கனவு உலகில் வாழ்கிறோம். போல்பச்சன் சினிமாவில் அஜய்தேவ்கான் உடன் இணைந்து சிறப்பாக நடித்துள்ளேன். அந்தப் படம் ஜூலை 6-ந்தேதி வெளியாகிறது. இந்த படத்தில் எனக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டது என்பது தவறானது. இந்த படத்தின் மூலம் எங்களின் நட்பு வளர்ந்துள்ளது.

இவ்வாறு அபிஷேக் பச்சன் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் நடிக்க கதை கேட்கிறேன்: ஐஸ்வர்யாராய்
» சினிமாவில் நடிப்பதை அபிஷேக் தடுத்து இருந்தால் திருமணத்துக்கு பின் வீட்டில் முடங்கி இருப்பேன் – ஐஸ்வர்யாராய்
» மீண்டும் நடிக்க உடல் எடையை குறைக்கும் ஐஸ்வர்யாராய்
» சினிமாவில் தம்பிக்கு உதவ மாட்டேன் : ஆர்யா பேட்டி
» திருமணத்திற்கு பிறகும் எந்த பாத்திரத்திலும் நடிக்க முடியும்: ஐஸ்வர்யாராய் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum