தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டாக்டரா, ஆக்டரா தனன்யா தவிப்பு

Go down

டாக்டரா, ஆக்டரா தனன்யா தவிப்பு Empty டாக்டரா, ஆக்டரா தனன்யா தவிப்பு

Post  ishwarya Mon Apr 01, 2013 6:16 pm

குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் படத்தில் நடித்தவர் தனன்யா. அந்தப் படத்திற்கு பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. அதனால் தனக்கு பிடித்தமான மருத்துவம் படிக்கச் சென்று விட்டார். சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பெருந் தொகையை நன்கொடையாக கொடுத்து டாக்டருக்குப் படித்தார். மகள் படித்துக் கொண்டிருந்தாலும் தனன்யாவின் அம்மா தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் தேடிக் கொண்டிருந்தார்.

டாக்டர் படிப்பின் இறுதியாண்டின்போது வெயிலோடு விளையாடு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. முன்பைவிட இப்போது மெருகும், அழகும் கூடியிருக்கிறார் தனன்யா. அடுத்த மாதம் படம் வெளிவரும் சூழ்நிலையில் தற்போது டாக்டர் படிப்பையும் முடித்து விட்டார். இனி தொடர்ந்து நடிப்பதா இல்லை மேற்கொண்டு டாக்டருக்கான மேல்படிப்பை தொடருவதா என்ற குழப்பத்தில் இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது. “டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. நான் நடிகையாக வேண்டும் என்பது அம்மாவின் கனவு. இரண்டையும் நிறைவேற்றி விட்டேன். இனி வாழ்க்கையை டாக்டராக தொடருவதா, நடிகையாக தொடருவதா என்று சின்ன குழப்பம் இருந்தது. இப்போது தெளிவாகிவிட்டேன். நல்ல வாய்ப்புகள் வந்தால் தொடர்ந்து நடிப்பது. இல்லாவிட்டால் மருத்துவ படிப்பை தொடர்வது, என்றும் ஒரு வேளை சினிவா வாய்ப்புகள் அதிகம் கிடைத்து பெரிய நடிகையானாலும் நான்கைந்து ஆண்டுகள்வரைதான் நடிப்பேன். அதன்பிறகு எனக்கு பிடித்த மருத்து துறையில் இணைந்து ஏழை மக்களுக்கு சேவை செய்வேன். என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பாலா படத்தின் நாயகி யார்? – மோதும் வேதிகா, தனன்யா!
» நெல்லை பஸ்களில் ‘ஜேப்படி” அதிகரிப்பு: பயணிகள் தவிப்பு
» நெல்லை பஸ்களில் ‘ஜேப்படி” அதிகரிப்பு: பயணிகள் தவிப்பு
» நடிகர் சீனிவாசன் கைதால் 4 படங்கள் முடக்கம்: டைரக்டர்கள் தவிப்பு
» கார் பஞ்சராகி போக்குவரத்து நெரிசல்: பயணிகள் முற்றுகையால் ஸ்ரேயா தவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum