தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குருந்தமலை குருந்தமலை

Go down

குருந்தமலை குருந்தமலை Empty குருந்தமலை குருந்தமலை

Post  meenu Mon Apr 01, 2013 5:45 pm


`முருகு' என்றால் அழகு... எனப்பொருள்! அழகு மிக்க முருகக் கடவுள் குழந்தையாக இருந்து காட்சியளிக்கும் போது... அந்த உன்னதத்தைக் கண்குளிரக்கண்டு-வழிபடக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா...! முருகனின் தந்தை சிவபெருமான்... குடி கொள்ளும் இடங்கள் முதுகுன்றங்களாக... விளங்கும்! மைந்தன்... குடியிருக்கும் இடங்கள்...

இளம் குன்றங்களாக அமையும்! இந்தக் `குருந்தமலை'யும் இளமையாகக் காட்சியளிக்கிறது. சற்றுத் தொலைவில் தெரியும் பெரிய மலைகளுடன் ஒப்பிடும் போது... இது... குழந்தைமலையாக வீற்றிருப்பது... தெளிவாகிறது. ஆமாம்...! குழந்தை வேலாயுதசுவாமியாக கந்தப் பெருமான் இந்த குருந்த மலையில் அருள்பாலிக்கிறான்.

இங்கே முருகக் கடவுள், `குழந்தை வேலாயுதசுவாமி' யாக கோயில் கொண்டு அறுநூற்று ஐம்பது வருடங்களாகிறது. இயற்கை எழில் சூழ்ந்த இம்மலையானது விவசாய நிலங்களுக்கு மத்தியில், கண்களுக்குக் குளிர்ச்சியாய்... கருத்துக்கு இனிமையாய் விளங்குகிறது. பழனிமலையில் நின்றிருப்பது போலவே இங்கும் மேற்கு நோக்கி நின்ற வண்ணம் வேலவன் காட்சியளிக்கிறான்.

குருந்தமலைக்கும் தெற்கே சஞ்சீவிமலையும், வடக்கே பகாசூரன்மலையும் தெரிகின்றன. அங்கே பகாசூரன் வசித்ததாகவும், நீலமலைத் தொடரின் ஒரு பகுதியாக விளங்குகிற அதன் அடிவாரத்தில்... ஆரவல்லி, சூரவல்லி கோட்டைகள் இருந்ததாகவும் அறியப்படுகின்றன. குருந்தமலையில்... ஏறிச் செல்ல படி வசதிகள் நன்கு அமைக்கப்பட்டுள்ளன.

மலையின் உயரம் நூற்றி இருபத்தைந்து அடிகள் தான்! ஏறிச் செல்ல எல்லோருக்குமே எளிதாக உள்ளது! அடிவாரத்தில் அமர்ந்திருக்கும் ராஜகம்பீர வினாயகரின் அற்புதத் தோற்றம் கண்களுக்குத் தெம்பூட்டக்கூடிய சக்தியோடு விளங்குகிறது! தன்னுடைய இளவல்... வேலாயுதன் கோவிலுக்குச் செல்லுகிற பக்தர்களை...

ஆசீர்வதித்து அருள் வழங்கும்... அம்சத்தோடு... இந்த... வினாயகப் பெருமான்... வீற்றிருக்கிறார்... என்று எண்ணம் உண்டாகிற தல்லவா...! அடுத்து... நாம் காண்பது இடும்பன் கோயிலாகும்! முருகக் கடவுள் குடியிருக்கும்... குன்றுகளிலெல்லாம்... இடும்பனையும் தரிசிக்கலாம். இங்கேயும்... நம் எதிர்ப்பார்ப்பு ஈடேறுகிறது.

இனி நாகதீர்த்தம், மயில் தீர்த்தம் ஆகியவைகளைப் பார்க்கச் செல்கிறோம். இந்த தீர்த்தங்கள் அமைந்துள்ள இடங்கள் நாகப்பாம்பினைப் போலவும், மயிலினைப் போலவும் காட்சியளிக்கின்றன. முன்னர், இம்மலையில் குருந்த மரங்கள் நிறைய இருந்தனவாம்! இக் கோவிலின் ஸ்தல விருட்சமாக `குருந்தமரம்' தான் குறிப்பிடப்படுகின்றது.

ஸ்ரீவேலாயுதசுவாமி திருக்கோவிலுக்கு 1970-ல் கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டது. அடுத்த கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தக் குழந்தை வேலாயுதனின் குங்குமப்பூ முகம் நம்... எண்ணங்களில் வண்ணமயமாய்... அருள் தெளிக்கிறது. தேவேந்திரன் புதல்வி தெய்வயானையை மணம் முடித்ததால் ராஜ அலங்காரமும், வேட்டுவர் இன மகளான வள்ளியைக் கைப்பிடித்ததால் வேடுவ அலங்காரமும்...

இந்த இறைவனுக்கு இங்கே செய்விக்கப்படுகின்றன. உருகி வேண்டுவோர்க்கெல்லாம் வரமளிக்கும்... ஆனந்தத்தோடு, வேலாயுதத்தை கையில் கொண்டு நான்கடியே உயரமுள்ள... ஆண்டவனாக இந்த தண்டபாணி நிற்கிறார். அர்த்த மண்டபத்தின் மேல் தளத்தில் மீன் சின்னமும், சூரியனையும், சந்திரனையும் சர்ப்பங்கள் தொட்டுக் கொண்டிருக்கிற கோலங்களும் காணப்படுகின்றன.

சூரிய, சந்திர கிரகண அடிப்படையை விளக்குபவைகளாக அவைகள் பொறிக்கப்பட்டுள்ளன. அகத்திய மலைக்குடமுனியும், அனந்தனாகிய சர்ப்பமும், சூரியனும்... இந்த முருகக் கடவுளைப் பூஜித்த இடமாகவும்... இக்கோவிலுக்கு அருஞ்சிறப்புகளுண்டு. இன்றைய நாளிலும் கூட இந்தக் கோவிலில் சூரியப் பூஜை தொடர்ந்து கொண்டிருப்பது கவனத்திற்குரிய அபூர்வமாகும்..

போக்குவரத்து வசதி:

கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பாதையில் 28 கி.மீ. தூரத்தில் காரமடை உள்ளது. அங்கேயிருந்து மேலும் 5 கி.மீ. தூரத்தில் அத்திக்கடவு செல்லும் பாதையில்... புங்கம்பாளையம் எனும் ஊரையடுத்து... அழகிய மலையாக `குருந்தமலை' அமைந்துள்ளது. சென்னையிலிருந்து ரெயில் அல்லது பேருந்து மூலம் கோயம்பத்தூர் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்லலாம்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum