தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இளையராஜா கச்சேரி… கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை!

Go down

இளையராஜா கச்சேரி… கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை! Empty இளையராஜா கச்சேரி… கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை!

Post  ishwarya Sat Mar 30, 2013 4:15 pm

டொரன்டோ: இசைஞானி இளையராஜா கனடாவில் நடத்தவிருக்கும் கச்சேரியைப் புறக்கணிக்குமாறு கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கை:
எங்களின் தொப்புள் கொடி உறவான கலைஞர்களே!
தயவுகூர்ந்து ஈழத் தமிழர்களின் வெந்த புண்ணிலே வேலைப் பாச்சாதீர்கள். நாங்கள் இழந்தது ஒன்று இரண்டல்ல. 40,000-க்கும் மேற்பட்ட மாவீரர்களையும், பல இலட்சக்கணக்கான எங்களின் சொந்தங்களையும், மண்ணையும் இழந்து உலகப்பந்தெங்கும் ஏதிலிகளாக அலைகின்றோம்.
எமக்கு இன்னும் நீதியோ, அரசியல் உரிமையோ கிடைக்கவில்லை. நாங்கள் அழுது புரண்டு ஆற்றுவதற்காக எங்களின் தலைவன் பிரபாகரனால் குறிக்கப்பட்ட மாதந்தான் இந்த நவம்பர் மாதம்.
இந்த மாதத்திலாவது அழுவதற்குக்கூட சிங்களவன் விடுவதாயில்லை. ஈழத்திலே இருக்கும் அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களையெல்லாம் இருக்கும் இடந்தெரியாமல் அழித்து விட்டான்.
ஈழத் தமிழனுக்கு இன்று இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் புலம்பெயர் தமிழர்கள்தான். இவர்களின் பலத்தைச் சிதைப்பதற்காக பல மில்லியன் கணக்கில் பணத்தை இனத் துரோகிகளின் கையில் வாரி இறைத்து மாவீரர்களின் விழாவைக் குழப்புவதற்காக சென்ற ஆண்டிலிருந்து மிகவும் வேகமாகச் செயற்பட்டுக் கொண்டு வருகின்றான்.
எங்களுக்கு இசைஞானி இளையராசா மேல் எந்தவொரு வெறுப்புமில்லை. மாவீரர்களுக்குரிய நவம்பரில் மாத்திரம் எந்தவெரு ஆடம்பரமும் வேண்டாமென்பதுதான் கனடியத் தமிழர்களின் வேண்டுகோள். கனடாவிலுள்ள தமிழ் மக்களின் எதிர்ப்பினால் இவர்கள் எதிர்பார்த்த மாதிரி நுளைவுச் சீட்டுகள் விற்பனையாகாமையினால், ஆங்காங்கே சிறிய நிகழ்வுகளை வைத்து நுழைவுச் சீட்டுகளை இலவசமாக விநியோகிக்கின்றார்கள்.
இதிலிருந்து என்ன தெரிகின்றது. இவர்களுக்கு பணத்தைப் பற்றிக் கவலையில்லை. எல்லாவற்றிற்கும் பின்னால் சிங்கள அரசின் ஆதரவு இருக்கின்றது. எனவே, எங்களின் அன்பான கலைஞர்களே இழந்து போன எங்களின் மாவீரர் பேரிலும், இசைப் பிரியா போன்ற ஈழக் கலைஞர்களின் பேரிலும் உங்களிடம் மன்றாட்டமாகக் கேட்கின்றோம், நவம்பர் 3-ல் கனடாவில் நடைபெறும் இளையராசாவின் இசை விழாவைப் புறக்கணிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இளையராஜா கச்சேரி வேறு தேதிக்கு தள்ளி வைப்பு!
» பாடல் வெளியீ்ட்டு விழாவில் இசைஞானியின் கச்சேரி
» பிளவுபட்டது நடனக் கலைஞர்கள் சங்கம்! பிறந்தது புதிய சங்கம்!!
» சான் பிரான்ஸிஸ்கோவிலும் கச்சேரி நடத்துகிறார் இசைஞானி!
» கனடா இசை நிகழ்ச்சியை நவம்பரில் நடத்த வேண்டாம் – இளையராஜாவுக்கு ஆர்கே செல்வமணி கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum