தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினி பிறந்த நாளுக்காக ஆல்பம் தயாரிக்கும் ராகவா லாரன்ஸ் – விஜய் ஆன்டனி

Go down

ரஜினி பிறந்த நாளுக்காக ஆல்பம் தயாரிக்கும் ராகவா லாரன்ஸ் – விஜய் ஆன்டனி Empty ரஜினி பிறந்த நாளுக்காக ஆல்பம் தயாரிக்கும் ராகவா லாரன்ஸ் – விஜய் ஆன்டனி

Post  ishwarya Sat Mar 30, 2013 12:01 pm

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளையொட்டி புதிய ஆல்பம் ஒன்றை வெளியிடுகின்றனர் நடிகர் ராகவா லாரன்ஸும் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனியும்.

வருகிற 12-12-12 அன்று ரஜினிக்கு 62 வயது பூர்த்தியாகிறது. இதையொட்டி அவரது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

திரையுலகில், ரஜினியை கவுரவிக்கும் வகையில் திரைப்பட நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் நடக்கின்றன.

நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸும், இசையமைப்பாளர் விஜய் ஆன்டனியும் இணைந்து இசை ஆல்பம் தயாரித்து வெளியிடுகின்றனர்.

இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறுகையில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நானும் அவரது ரசிகன். இந்த ஆண்டு ரஜினியின் பிறந்த நாள் 12-12-12 அன்று வருகிறது. இது விசேஷமான தேதி.

எனவே ரஜினிக்கு அன்பு பரிசாக வழங்க இசை ஆல்பம் ஒன்றை தயாரித்து வருகிறேன். 12-12-12 அன்று இந்த குறுந்தகடு வெளியிடப்படும். ரஜினி மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த ஆல்பத்தை உருவாக்கி வருகிறேன்.

இதற்கான பாடல்களுக்கு திரைப்பட இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். ரஜினி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இது அமையும்,” என்றார்.

பாடல் சிடிக்களை இலவசமாகத்தானே தரப் போறீங்க லாரன்ஸ்?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum