தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நான் இதுவரை நடித்திராத வேடம் மூன்று பேர் மூன்று ‌காதல்! சொல்வது அர்ஜூன்!

Go down

நான் இதுவரை நடித்திராத வேடம் மூன்று பேர் மூன்று ‌காதல்! சொல்வது அர்ஜூன்! Empty நான் இதுவரை நடித்திராத வேடம் மூன்று பேர் மூன்று ‌காதல்! சொல்வது அர்ஜூன்!

Post  ishwarya Fri Mar 29, 2013 6:06 pm

கேளடி கண்மணி, ஆசை, ரிதம், பூவெல்லாம் கேட்டுப்பார், சத்தம் போடாதே போன்ற படங்களை இயக்கிய ‌வஸ்ந்த் சிறிய இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் மூன்று பேர் மூன்று காதல். அர்ஜூன், விமல், பானு(முக்தா), சுர்வின், லாசினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரி‌க்கையாளர் சந்திப்பில் பங்கேற்று பேசிய அர்ஜூன், நான் இதுவரை கிட்டத்தட்ட 160 படங்கள் கிட்‌ட நடிச்சிருக்கேன். ஆனால் இந்தபடத்தில் உள்ள கேரக்டர் மாதிரி எந்த படத்திலும் நான் இதுவர‌ை நடிக்கவில்லை. வஸந்த் கூட வேலை பார்த்தது அவ்வளவு நல்ல அனுபவம். இதுவரை நான் நடித்த படங்களால் எனக்கு ஆக்ஷ்ன் கிங் என்ற பெயர் கிடைத்தது. ஆனால் இந்த படத்தில் எனக்கு கொடுத்திருக்கும் ரோலால் என்னை வேறு ஒரு இமேஜூக்கு கொண்டு போகும் என்று நினைக்கிறேன். ரொம்ப வித்தியாசமான படம். இதுக்காக வஸந்த்க்கு தான் நான் நன்றி சொல்லணும்.

படத்தில் மூன்று ஹீரோக்கள் இருந்தாலும் எல்லோருக்கும் சரிசமமான ரோல் கொடுத்திருக்காரு. யாருக்கும் எந்த குறையும் வைக்கல. படத்திற்கு டப்பிங் பேசும் போதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். அப்புறம் இந்த படத்தோட தயாரிப்பாளர் ஒரு கேள்வி கூட கேட்காமல் அவ்வளவு சுதந்திரம் கொடுத்து படம் எடுக்க வைத்தார். இந்தமாதிரி தயாரிப்பாளர்கள் நிறையபேர் வரணும். யுவன் இசையில் பாடல்கள் ரொம்ப அருமையாக வந்திருக்கு. அவருக்கும் என் வாழ்த்துக்கள்.படத்தில் எனக்கு ஜோடியாக நடித்த ஹீரோயின் யார் என்று டைரக்டர் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருக்கார். படத்தில் நடித்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்! என்று சொல்லி அமர்ந்தார்.

அக்ஷ்ன் கிங் என்ற பெயருக்கு ஏற்றார் போல் இப்பவும் அதே துடிப்புடன் இருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று ரிலீஸ்: எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல்
» எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ்
» எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ்
» பாடல் காட்சிக்கு தயாராகும் மூன்று பேர் மூன்று காதல்
» மூன்று பேர் மூன்று காதல் - லேட்டஸ்ட் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum