தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாளை திரையுலகினர் உண்ணாவிரதம்

Go down

நாளை திரையுலகினர் உண்ணாவிரதம் Empty நாளை திரையுலகினர் உண்ணாவிரதம்

Post  ishwarya Fri Mar 29, 2013 12:49 pm

மத்திய அரசு விதித்துள்ள சேவை வ‌ரியை ரத்து செய்யக் கோ‌ரி நாளை தமிழ் திரையுலகினர் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகின்றனர். உண்ணாவிரதத்தில் அனைத்துப் பி‌ரிவு திரையுலகினரும் கலந்து கொள்வதற்கு வசதியாக நாளை ஒருநாள் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன.

பெரும் பணக்காரர்களுக்கும், வெளிநாட்டு கம்பெனிகளுக்கும் ஆயிரக்கணக்கில் வ‌ரிச் சலுகை அளித்து வரும் மத்திய அரசு அதனை ஈடு செய்யும் விதமாக இந்திய நடுத்தர வர்க்கத்தின் மீதும் விளிம்புநிலை ஜனங்களின் மீதும் கடுமையான வ‌ரிகளை விதித்து வருகிறது.

திரைத்துறையில் பெ‌‌ரிய நடிகர்கள், நடிகைகள், சில இயக்குனர்கள், தயா‌ரிப்பாளர்கள் என இருபது சதவீதத்தினரைத் தவிர மற்றவர்கள் மத்திய வர்க்கத்தை சேர்ந்தவர்களே. இவர்களுக்கும் வருமான வ‌ரியுடன் 12.3 சதவீத சேவை வ‌ரி விதித்துள்ளது. இதனை‌‌க் கண்டித்தும் சேவை வ‌ரியை விலக்கக் கோ‌ரியும் நாளை தமிழ் திரைத்துறையினர் அனைவரும் சென்னையில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வசதியாக படப்பிடிப்புகள் நாளை ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை வள்ளுவர் கோட்டத்துக்கு முன்னால் உண்ணாவிரதத்துக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. போராட்டத்தில் அனைத்து நடிக‌ர், நடிகைகளும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என நடிகர் சங்க‌த் தலைவர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெ‌ரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum