தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹெலிகாப்டர் ஊழல் பிரச்சினையில் கருணை காட்ட மாட்டோம் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி உறுதி

Go down

ஹெலிகாப்டர் ஊழல் பிரச்சினையில் கருணை காட்ட மாட்டோம் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி உறுதி  Empty ஹெலிகாப்டர் ஊழல் பிரச்சினையில் கருணை காட்ட மாட்டோம் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி உறுதி

Post  meenu Tue Mar 26, 2013 5:03 pm

ஹெலிகாப்டர் பேர ஊழலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கருணை காட்டாமல் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி உறுதியுடன் அறிவித்தார்.

ஹெலிகாப்டர் ஊழல்

ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிக முக்கிய பிரமுகர்களுக்கு அதி நவீன 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்காக, ஆங்கிலோ இத்தாலி நிறுவனத்துடன் (அகஸ்டா வெஸ்ட் லேண்ட்) மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் ரூ.362 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.அது குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., விமானப்படை முன்னாள் தளபதியான எஸ்.பி.தியாகி, அவருடைய உறவினர்கள் 3 பேர், ஐரோப்பாவை சேர்ந்த தரகர் மற்றும் 4 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. சேகரித்துள்ள ஆவணங்கள் அனைத்தும் மத்திய அமலாக்கப்பிரிவிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டு உள்ளது.

கருணை காட்டமாட்டோம்

இந்த நிலையில் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்த ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணியிடம், இந்த ஊழல் குறித்து கேட்கப்பட்டது. அதற்குப்பதில் அளித்த அந்தோணி, ‘‘சற்றுப்பொறுங்கள். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதி அளித்தார்.‘‘இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. மிகத்தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. பாராளுமன்றத்துக்கு நான் ஏற்கனவே அளித்திருந்த உறுதிமொழியில் இருந்து பின்வாங்க மாட்டேன். ஒரு சிலர் பணம் பெற்று இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இதில் யாருக்கும் நாங்கள் கருணை காட்ட மாட்டோம். அவர்கள் எவ்வளவு செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றும், ஏ.கே.அந்தோணி கூறினார்.பேட்டியின்போது ஏ.கே.அந்தோணி மேலும் கூறியதாவது:–

ஆயுத கொள்முதல் கொள்கை

‘‘புதிய ஆயுத கொள்முதல் கொள்கையை உருவாக்குவதில் ராணுவ அமைச்சகம் இறுதி கட்டத்தில் உள்ளது. நமக்கு கிடைத்துள்ள பல்வேறு அனுபவங்களின் அடிப்படையில், புதிய கொள்கை உள்நாட்டில் தயாரிக்கப்படும் தளவாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமையும்.இதுவரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆயுத கொள்முதல் கொள்கை புதுப்பிக்கப்பட்டு வந்தது. இனி ஆண்டுதோறும் இந்த கொள்கை புதுப்பிக்கப்படும்.

இலங்கை தமிழர் பிரச்சினை

இத்தாலி கப்பல் படை வீரர்கள் பிரச்சினையில் இந்திய நீதிமன்றங்களும், மத்திய அரசும் மேற்கொண்ட நடவடிக்கை, நமது நாடு மற்றும் நீதிமன்ற அமைப்புகளின் கண்ணியத்தையும், கவுரவத்தையும் உயர்த்துவதாக அமைந்துள்ளது’’.இவ்வாறு அவர் கூறினார்.இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி கேட்டதற்கு, இந்த பிரச்சினையில் மத்திய அரசு மட்டுமின்றி நாடு முழுவதும் ஏற்கனவே ஒற்றுமையுடன் செயல்பட்டதாக, ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹெலிகாப்டர் ஊழல்: மாஜி ராணுவ தளபதி தியாகி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு : 12 இடங்களில் ரெய்டு
» இந்தியாவுக்கு ஹெலிகாப்டர் விற்றதில் ஊழல் - அதிகாரி கைது
» ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்: முக்கிய ஆவணங்கள் வந்தன
» ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்: முக்கிய ஆவணங்கள் வந்தன
» தெலுங்கானா பிரச்சினையில் சுமூக தீர்வு ஏற்படும்: சென்னையில் மத்திய மந்திரி வயலார் ரவி பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum