தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நிகழ்காலம்

Go down

 நிகழ்காலம் Empty நிகழ்காலம்

Post  oviya Sun Mar 24, 2013 7:11 pm

மகாகவி காளிதாசரின் ஒரு கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு தான் இது. இதில் ஒருவருடைய வாழ்க்கை எத்தனை நீண்டதாக இருந்தாலும் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் காலம் என்னவோ நிகழ்காலம் மட்டுமே என்கிறார்.
நல்லதோ, கெட்டதோ பல நிகழ்வுகள் நடந்து முடிந்து, நமது வாழ்க்கையின் வரலாறாகப் பதிவாகிவிட்டது. கடந்து போன அந்தக் காலத்தில் நடந்து முடிந்திருக்கிற நிகழ்வுகளை நம் விருப்பப்படி மாற்றியமைத்திட முடியாது.
இனி எத்தனை காலம் நாம் இருக்கப் போகிறோம்? அந்தக் காலத்தில் என்னவெல்லாம் நடக்கப் போகின்றன? என்ற கேள்விக்குறியை எழுப்பும் எதிர்கால நிகழ்வுகளை நாம் எட்டிப்பார்க்க முடியாது.உண்மை நிலை இப்படி இருக்கும்போது நம் கட்டுப்பாட்டில் இல்லாத கடந்த கால நிகழ்வுகளின் நினைவுகளிலும், எதிர்காலக் கனவுகளிலும் மூழ்கிக்கொண்டு, நம் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய நிகழ்காலத்தை நாம் வீணடித்துக் கொண்டிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கையானது.
இந்தக் கணம் மட்டுமே நம்முடையது. நாம் நினைத்தபடி எப்படியும் நடந்துகொள்ள இந்தக் கணத்தில் மட்டுமே முடியும். முழுமையாக நம்மால் செயலாற்ற முடிந்த இந்த கணத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நமது வாழ்க்கை நிர்ணயம் செய்யப்படுகிறது.
எனது ஆசிரியர் திரு. த. வரதராஜன் அவர்கள் அடிக்கடி சொல்லும் ஒரு கருத்து என் நினைவுக்கு வருகிறது. “80 வயதில் நாம் கம்பை ஊன்றி நடக்கப் போகின்றோம் என்பதற்காக இப்போதே கம்பை ஊன்றி நடக்கப் பழகலாமா?” என்பார். ஆமாம், நாம் அதிகமாகக் கோட்டை விடுவது நிகழ்காலத்தைத் தான்.
கடந்த காலத்தில் அப்படியாகி விட்டது, இப்படியாகி விட்டது என்று வருத்தப்பட்டும், நாளை என்ன நடக்குமோ? என்று கவலைப்பட்டுக் கொண்டும் இருந்தால் என்ன நிகழ்ந்து விடப்போகிறது. நேற்றைய வருத்தங்களால் கடந்த காலம் மாறப்போவதுமில்லை. நாளைய கவலைகளால் எதிர்காலம் சிறந்துவிடப் போவதுமில்லை. வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் எல்லா வெற்றிகளுக்கும், மேன்மைகளுக்கும் அடிப்படையான சூட்சுமமாக இருப்பது கடந்த காலமோ, எதிர்காலமோ அல்ல. இந்தக் கணம் மட்டுமே. இந்தக் கணத்தில் தான் நம்மால் எல்லாவற்றையும் செய்ய முடியும். எனவே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமானது இந்தக் கணமே.
உதாரணமாக, இரவில் நமது கிராமத்தில் இருந்து காரின் முன் விளக்குகள் சரியாக எரிந்தாலே போதும். பயண தூரம் அத்தனையையும் சிரமம் இன்றிக் கடந்து விடலாம்.100 கி.மீ. தூரமுள்ள நகருக்குக் காரில் செல்வதாகக் கொள்வோம். இருட்டில் பயணம் மேற்கொள்வதால் நாம் சென்று சேரும் நகர் வரையிலான 100 கி.மீ.க்கும் தெருவிளக்கு வேண்டும் என்பது அவசியமில்லை. நமது காரின் முன் விளக்குகள் சரியாக எரிந்தாலே போதும். பயண தூரம் அத்தனையையும் சிரமம் இன்றிக் கடந்து விடலாம்.
காரின் முன் விளக்குகளால் சில அடி தூரங்கள் மட்டுமே தான் வெளிச்சத்தைத் தர முடியும் என்பதால் பயணத் தூரம் வரை தெருவிளக்கு எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பது நகைப்புக்குரியதாகி விடுகிறது. இதைப்போலத் தான் நாம் ஒவ்வொருவரும் எதிர்காலத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
இதை மிக அழகாக தாமஸ் கார்லைல் “நம்முடைய முக்கியமான வேலை தூரத்தில் மிக மங்கலாகத் தெரிவது என்ன என்று தெரிந்து கொள்வதல்ல. நம் கண் முன்னால் இருப்பது என்ன என்று தெரிந்து கொண்டு அதைச் சிறப்பாகச் செய்வது தான்” என்று கூறியிருப்பார்.
கார்லைல் கூறியபடி இந்தக் கணத்தை நாம் எல்லோரும் சிறப்பாக உபயோகித்தால் எதிர்காலம் தானாகச் சிறப்பாய் அமைந்துவிடும்.கடைசி வரை நம்மால் செயல்பட முடிந்த காலம் நிகழ்காலம் மட்டுமே என்பதை இதன் மூலம் அறியலாம். எனவே நிகழ்காலத்தில் மிகுந்த கவனத்தைச் செலுத்த வேண்டும். நேற்றைய நிகழ்வுகளில் இருந்து ஏதாவது பாடம் இந்தக் கணத்தில் உணர்வோமானால் அது நம்மை பக்குவப்படுத்தி அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும். நாளைய நாளின் வெற்றிக்காகத் திட்டமிட்டு ஏதாவது இந்தக் கணத்தில் செய்வோமானால் அது நம்மை முதல்நிலை நோக்கி முன்னேற்றும்.
ஆக, இந்த கணத்தில் நாம் மேற்கொள்ளும் செயல்தான் நேற்றைய அனுபவத்திற்கும், நாளைய நடப்பிற்கும் பாலமாக அமைந்து வெற்றியை ஈட்டித்தரும். எனவே நமக்குத் தரப்பட்டிருக்கும் நேரத்தில், நமக்கு அமைந்த சூழ்நிலையில் எப்படி முடிந்த அளவு சிறப்பாகச் செயல்படலாம் என்று யோசித்து அதன் வழி செயல்படுங்கள்.
மாற ஆசைப்படுகிறீர்களா? அதற்கான முதல் முயற்சியை இந்தக் கணத்திலேயே ஆரம்பியுங்கள். ஏதாவது சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அதற்கான முதல் அடியை இந்தக் கணத்தில் வையுங்கள். நாளை என்பது நம்மிடம் இல்லை என்பதை உணர்ந்து, நம்மிடம் உள்ள இந்தக் கணத்தையே சரியாகப் பயன்படுத்துங்கள். காளிதாசர், “நதி நீரோட்டத்தில் நாம் ஒரு முறை காலை நனைத்த நீரில் இன்னொரு முறை நனைக்க முடியாது.
ஒவ்வொரு முறையும் நீர் புதிதாகவே வரும். அதைப்போல தான் கால ஓட்டத்தில் ஒவ்வொரு கணங்களும் புதியவையே. இந்தக் கணத்தில் வாழும் முறையைப் பொறுத்தே நமது வெற்றிகளும், தோல்விகளும் தீர்மானிக்கப்படுகின்றன” என்று சொன்னதுபோல் நமது முழுக்கட்டுப்பாட்டில் இருப்பது இந்தக் கணம் தான். அதில் தான் வாழ்க்கையின் வெற்றிச் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum