தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

"பிரியாணி'யால் போக்குவரத்து நெரிசல்

Go down

"பிரியாணி'யால் போக்குவரத்து நெரிசல் Empty "பிரியாணி'யால் போக்குவரத்து நெரிசல்

Post  ishwarya Sat Mar 23, 2013 2:37 pm

விழுப்புரம் செஞ்சி சாலையில் நடிகர் கார்த்தி நடிக்கும் பிரியாணி சினிமா படத்தின் படப்பிடிப்பு வியாழக்கிழமை நடைபெற்றதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
÷நடிகர் கார்த்தி, நடிகை ஹன்சிகா நடித்து இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கும் பிரியாணி சினிமா படப்பிடிப்பு வியாழக்கிழமை விழுப்புரம், செஞ்சி சாலையில் உள்ள டிராக்டர் ஷோரூமில் நடைபெற்றது.
÷அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகர் நாசருக்கு பிரமாண்ட கட் அவுட், நடிகர் ராம்கிக்கும் கட்அவுட்கள் செஞ்சி சாலையில் வைக்கப்பட்டிருந்தது. நடிகர் கார்த்தி ஷோரூமை திறக்கும் காட்சி நேற்று காலை முதல் படமாக்கப்பட்டது.
÷படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாத நிலையில், அதனை வேடிக்கை பார்க்க ஏராளமான மக்கள் சாலையின் நடுவே நின்றனர். இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
÷செஞ்சி சாலையில் இரு சக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாமல் மக்கள் சிரமம் அடைந்தனர். இன்னும் 6 நாட்கள் அதே இடத்தில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் போதிய போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கார் பஞ்சராகி போக்குவரத்து நெரிசல்: பயணிகள் முற்றுகையால் ஸ்ரேயா தவிப்பு
» கூட்ட நெரிசல்.. அனுமதி மறுப்பு… செல்போனை தூக்கிப் போட்டு உடைத்த ராதிகா!
» எந்திரன் போக்குவரத்து இடையூறு எதிரொலி – வழக்குப் போடப் போகிறார் டிராபிக் ராமசாமி
» கார் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததால் நடிகர் விவேக்குக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
» போடிமெட்டு மலைப்பாதையில் போக்குவரத்து அடியோடு ரத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum