தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி

Go down

நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி Empty நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி

Post  ishwarya Fri Mar 22, 2013 5:12 pm



என் வீட்டில் 6 ஆண்டுகளுக்கு முன்பு செக்யூரிட்டியாக வேலை பார்த்தவர்தான் கல்லாப்பெட்டி திரைப்படத்தின் நாயகன் என்று இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் தெரிவித்துள்ளார்.

'கல்லாப்பெட்டி' திரைப்படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையிலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: என் உடல் நிலை சரியில்லாத நிலையிலும் இந்த விழாவிற்கு நான் வந்ததற்கே காரணம் இருக்கிறது. இன்று பல புதியவர்கள் வருகிறார்கள். நல்ல படங்களைத் தருகிறார்கள். அவர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஆனால், நான் வந்த புதிதில் எங்களுகெல்லாம் அப்படியில்லை. பல படங்கள் எடுத்த பிறகே எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. இந்தப்படத்திலும் புதியவர்கள்தான் பங்கேற்றிருக்கிறார்கள். இவர்களை வாழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் முக்கியமாக வந்தேன். ”என் வீட்டில் 6 ஆண்டுகளுக்கு முன் செக்யூரிட்டியாக வேலை பார்த்தவர்தான் இந்த அஸ்வின் பாலாஜி. நான் வரும் போதெல்லாம் எழுந்து நின்று வணக்கம் வைப்பார், எப்போதும் எதையாவது எழுதிக் கொண்டேயிருப்பார். அப்படி என்னதான் எழுதுகிறார் என்று வாங்கிப் பார்ப்பேன். கவிதைகள் எழுதியிருப்பார். அப்படி அவருக்குள் ஒரு திறமை இருந்ததை நானும் பார்த்தேன். அதன் பின் அவர் என் வீட்டில் வேலை செய்யவில்லை. என்னை விட திறமைசாலியான கமல் வீட்டிற்குச் சென்று விட்டார். இன்னும் நான்கு ஆண்டுகள் சென்றிருந்தால் நானே அவரை வைத்து ஒரு படத்தை இயக்கியிருப்பேன். ஆனால் விஷயம் அது இல்லை. திறமை எங்கிருந்தாலும், யாரிடம் இருந்தாலும் அது இப்போது ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இந்த படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள், படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொள்ள ஆசை, அது வரை நான் இருந்தால் வந்து கலந்து கொள்கிறேன் ” என்று கூறி விழாவுக்கு வந்திருந்த எல்லோரையும் நெகிழ வைத்தார் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர்.

ஐ ட்ரீம்ஸ் தயாரித்துள்ள கல்லாப்பெட்டி திரைப்படத்தில் நாயகனாக அஸ்வின் பாலாஜியும், நாயகியாக ரோஸின் ஜாலியும் நடித்துள்ளனர். இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் ரா ரா இயக்கியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum