தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் பரதேசி

Go down

கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் பரதேசி Empty கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் பரதேசி

Post  ishwarya Fri Mar 22, 2013 5:10 pm



தமிழ் திரைப்பட இயக்குநர்களில் தங்களுக்கு என தனி முத்திரைப் பதித்துள்ளவர் பாலா.

தற்போது இவர் இயக்கியுள்ள பரதேசி திரைப்படம் நிச்சயமாக தமிழ் திரையுலகில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பல்வேறு அம்சங்கள் பரதேசி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

இப்படத்தின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் வகையில், விரைவில் நடைபெற உள்ள கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பரதேசி திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

முதலில் இப்படத்தை பிப்ரவரி 15ம் தேதி திரையிடலாம் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் அது தள்ளிப்போனது. இந்த நிலையில், பரதேசி திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட அனுப்பப்பட உள்ளது என்றும், அதனால், பட வெளியீடு தாமதமாகும் என்றும் கூறப்படுகிறது.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பின்னணியை அடிப்படையாக வைத்து பாலா இயக்கியுள்ள இப்படத்தில் அதர்வா, வேதிகா, தன்ஷிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum