தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் 'விஸ்வரூபம்'!

Go down

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் 'விஸ்வரூபம்'!  Empty கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் 'விஸ்வரூபம்'!

Post  ishwarya Tue Mar 19, 2013 4:45 pm

கமல் படம் என்றாலே அப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் அவ்வப்போது வெளிவந்தபடி இருக்கும். ஆனால் 'விஸ்வரூபம்' படத்தில் யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து இதுவரை ஒரு அறிக்கைகூட வெளியாகவில்லை. 'விஸ்வரூபம்' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தினை கேன்ஸ் விழாவுக்கு அனுப்ப திட்டமிட்டு இருக்கிறார் கமல். இது குறித்து கமல் கூறியதாவது, "விஸ்வரூபம் படத்தினை கேன்ஸ் விழாவிற்கு அனுப்பலாம் என தோன்றியது. ஆனால், கடைசி தேதிக்குள் படத்தினை முடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய சவால். கேன்ஸ் பட விழா ஏற்பாட்டாளர் கிறிஸ்டியன் ஜீனுடன் பேசி வருகிறேன். மார்ச் 15-ம் தேதிக்குள் படப்பணிகள் முடியும் என நம்புகிறேன். கேன்ஸ் பட போட்டி பிரிவில் 'விஸ்வரூபம்' படத்தினை சேர்க்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். அதற்கேற்ப கேன்ஸ் விழாக் குழுவினர் இறுதித் தேதிகளை மாற்றிக் கொள்வதாகக் கூறியுள்ளனர்." என்று தெரிவித்து இருக்கிறார். 'விஸ்வரூபம்' படம் கேன்ஸ் சர்வதேச போட்டி பிரிவில் இடம் பெற்றால், நேரடியாக பங்கேற்கும் முதல் தமிழ் படம் என்ற பெருமை 'விஸ்வரூபம்' படத்திற்கு கிடைக்கும். இதப் பாருங்கப்பா.. ஒத்திகை நாயகனுக்காக தேதியையே ஒத்தி வைப்பாங்களாமே.....?!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum