தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிளவுபட்டது நடனக் கலைஞர்கள் சங்கம்! பிறந்தது புதிய சங்கம்!!

Go down

பிளவுபட்டது நடனக் கலைஞர்கள் சங்கம்! பிறந்தது புதிய சங்கம்!! Empty பிளவுபட்டது நடனக் கலைஞர்கள் சங்கம்! பிறந்தது புதிய சங்கம்!!

Post  ishwarya Mon Mar 18, 2013 5:06 pm

திரைப்பட நடனக் கலைஞர்கள் சங்கம் இரண்டாக பிரிந்தது. புதிய சங்கத்திற்கு தற்போது தலைவராக செயல்படும் மூத்த நடன இயக்குநர் ரகுராம், நாங்கள் யார் வேலை கொடுத்தாலும் செய்வோம். எந்த அணியிலும் நாங்கள் இல்லை. என்று அறிவித்திருக்கிறார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான பெப்சியில் மொத்தம் 23 சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன. அதில் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடன கலைஞர்கள் சங்கமும் ஒன்று. இந்த சங்கத்தில் நடன இயக்குநர்கள் மற்றும் நடன கலைஞர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சம்பள பிரச்சினை காரணமாக பெப்சி வேலை நிறுத்தம் அறிவித்திருக்கும் இந்த நேரத்தில் நடன கலைஞர்கள் சங்கம் இரண்டாக பிரிந்திருக்கிறது. இதில் ஒரு சாரார் பெப்சிக்கு ஆதரவாகவும், மற்றொரு அணியினர் நடுநிலையோடு வேலை கொடுத்தால் நாங்கள் செய்ய தயார் என்று அறிவிப்பதற்காக நேற்று நடன கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதைத் தொடர்ந்து சென்னை, தியாகராயநகர் பர்கிட் சாலையில் உள்ள நடன கலைஞர்கள் சங்கத்தின் அலுவலகம் இழுத்து மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கு கூடிய நடன இயக்குநர்கள் ரகுராம் தலைமையில், 'தென்னிந்திய நடன இயக்குநர்கள் சங்கம்' என்ற புதிய சங்கத்தை தொடங்கப்போவதாக அறிவித்தார்கள். இதனால் நடன கலைஞர்களுக்கு ஒரு சங்கம், நடன இயக்குநர்களுக்கு ஒரு சங்கம் என்று இரண்டு சங்கங்களாக பிரிந்தது. தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக சங்கத்தை உடைத்திருக்கிறீர்களா? என்று மூத்த நடன இயக்குநர் ரகுராமிடம் கேட்டபோது, "சங்கத்தை உடைத்திருக்கிறோம் என்பது தவறான வார்த்தை. நடன கலைஞர்களுக்கும், நடன இயக்குநர்களுக்கும் இடையே சரியான புரிதலும், அணுகுமுறையும் இல்லை. எனவே நடன கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நடன இயக்குநர்கள் விலகி விட்டோம். எங்களின் புதிய சங்கத்திற்கு அங்கீகாரம் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அங்கீகாரம் கிடைத்தவுடன் யார் யார் எந்த பொறுப்பு வகிக்கப்போகிறார்கள் என்ற தகவலை சொல்கிறோம். எங்களுடைய புதிய சங்கமும் இதே அலுவலகத்தில் தான் இயங்கும். எங்களுக்கு இதில் பங்கு இருக்கிறது. அதற்கான கடிதத்தையும் நாங்கள் கொடுத்திருக்கிறோம். நாங்கள் தயாரிப்பாளர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. நாங்கள் நடுநிலை வகிக்கிறோம். யார் வேலை கொடுத்தாலும் நாங்கள் செய்வோம்." என்றார். ரகுராமுக்கு ஆதரவாக நடன இயக்குநர்கள் தாரா, கல்யாண், காதல் கந்தாஸ், அசோக் ராஜா, ஷோபி ஆகியோரும் பேசினார்கள். அடிங்கடா மேளத்த.... போடுங்கடா ஒங்க ஆட்டத்த........!!!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum