தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல்:மோர்க்கூழ்

Go down

சமையல்:மோர்க்கூழ் Empty சமையல்:மோர்க்கூழ்

Post  ishwarya Mon Mar 18, 2013 12:16 pm



உடல் இளைக்க டயட் என்பதை விட நல்ல ஹெல்த்தியான சாப்பாடு சாப்பிட்டாலே ஊளைச்சதையின்றி அழகாகவும், ஆரோக்யமாகவும் இருக்கலாம். அந்த வகையில் அடிக்கடி மோர்க்கூழ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க.. அப்புறம் ஸ்லிம் ராணியாகிடுவீங்க......


தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்
கோதுமை மாவு - 1 கப்
சோயா மாவு - 1/4 கப்
தண்­ணீர் - 2 கப்
மோர் - 2 கப்
எண்ணெய் - 2 டீ ஸ்பூன்
கடுகு - 1 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
உ.பருப்பு - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, தண்ணீ­ர் ஊற்றவும்.

* இப்போது உப்பைப் போட்டு கொதிவந்தவுடன், அரிசிமாவு, கோதுமை மாவு, சோயா மாவு மூன்றையும் கலந்து வைத்துக் கொண்டு, கொதிவந்த நீரில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்த மாவைப் போட்டுக் கிளறவும்.

* கொஞ்சம் கெட்டியானவுடன் மோர்விட்டு கைவிடாமல் கிளறிக் கொண்டேயிருக்கவும்.

* மோர் கூழில் ஒன்று சேர்ந்தவுடன் இறக்கி எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி கொத்தமல்லித் தூவி, துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

* முருங்கைக்காய் சாம்பார் தொட்டு சாப்பிட்டால் மிகமிக ருசியாக இருக்கும்.

* சூடாக சாப்பிட்டால் தேவாம்ருதம்தான். உடல் இளைக்க விரும்புபவர்கள் மதிய நேரத்திற்கு சாப்பிட உகந்தது இந்த மோர்க்கூழ்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum