தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல்:ராகி முறுக்கு...!

Go down

சமையல்:ராகி முறுக்கு...! Empty சமையல்:ராகி முறுக்கு...!

Post  ishwarya Mon Mar 18, 2013 11:46 am



யாரும் கலரை பார்த்து பயப்பட வேண்டாம்... டேஸ்ட் சூப்பரா இருக்கும்.. குறைந்த செலவில் எளிமையான முறையில் செய்யலாம்.. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.. செஞ்சுதான் பாருங்களேன்......

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 3 கிண்ணம்
அரிசி மாவு - 2 கிண்ணம்
உளுந்து மாவு - 1 கிண்ணம்
பெருங்காயம் பொடி - சிட்டிகை
எள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

* உளுந்து மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.

* அதனுடன் அரிசி மாவு, ராகி மாவு, உப்பு, எள், காயம், வெண்ணெய் கலந்து தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

* தேன்குழல் (முறுக்கு) அச்சில் மாவை போட்டு, மிதமான சூட்டில் உள்ள எண்ணையில் பிழிந்து, பொறித்து எடுக்கவும்.

* (சத்தம் அடங்கியதும் எடுத்து விட வேண்டும்... ராகி நிறத்தில் பொன்னிறம் எல்லாம் கண்டுபிடிக்க முடியாது.)

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum