தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முத்துலட்சுமி எதிர்ப்பு எதிரொலி: வனயுத்தம் படத்தில் விஜயலட்சுமி காட்சிகள் அடியோடு நீக்கம்

Go down

முத்துலட்சுமி எதிர்ப்பு எதிரொலி: வனயுத்தம் படத்தில் விஜயலட்சுமி காட்சிகள் அடியோடு நீக்கம் Empty முத்துலட்சுமி எதிர்ப்பு எதிரொலி: வனயுத்தம் படத்தில் விஜயலட்சுமி காட்சிகள் அடியோடு நீக்கம்

Post  ishwarya Sat Mar 16, 2013 2:21 pm

வீரப்பன் வாழ்க்கை 'வன யுத்தம்' என்ற பெயரில் படமாகியுள்ளது. இப்படம் தமிழகத்திலும், ஆந்திராவிலும் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் வீரப்பன் கேரக்டரில் கிஷோர் நடித்துள்ளார். வீரப்பனை வேட்டையாடும் போலீஸ் அதிகாரி விஜயகுமார் வேடத்தில் அர்ஜூன் வருகிறார்.

இந்த படத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக விஜயலட்சுமி நடித்து இருந்தார். அவர் நடித்த அனைத்து காட்சிகளும் அடியோடு நீக்கப்பட்டு உள்ளன. ஒரு சீன்கூட படத்தில் இல்லை. இதனால் விஜயலட்சுமி அதிர்ச்சியாகியுள்ளார். இவர் ஏற்கனவே சென்னை-28, அஞ்சாதே உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் இயக்குனர் அகத்தியனின் மகள். வீரப்பனாக வரும் கிஷோருக்கும் விஜயலட்சுமிக்கும் திருமணம் நடக்கும் சீன்கள், இருவரும் காட்டில் உள்ள ஏரியில் படகில் பயணிக்கும் காட்சிகள் என பல சீன்கள் படமாக்கப்பட்டு இருந்தன. இதற்காக நிறைய நாட்கள் காட்டுக்குள் அட்டை பூச்சிகள், கொடிய விலங்குகள் நடுவில் முகாமிட்டு கஷ்டப்பட்டு நடித்துக் கொடுத்தார். ஆனால் இப்போது அதில் ஒன்று கூட படத்தில் இல்லை.

வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தனது சீன்கள் எதுவும் படத்தில் இருக்க கூடாது என எதிர்த்ததால் அவை, நீக்கப்பட்டன. இது குறித்து படத்தின் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் கூறும் போது, முத்துலட்சுமி படத்துக்கு தடங்கல்கள் ஏற்படுத்தி ரொம்ப கஷ்டப் படுத்தி விட்டார். கோர்ட்டில் அடிக்க பாய்ந்தார். 32 காட்சிகளை நீக்க சொன்னார். எதிர்ப்பு தெரிவித்த காட்சிகள் நீக்கப்பட்டு விட்டன. பணம் தான் அவர் குறிக்கோள்.

கோர்ட்டு உத்தரவுப்படி கடன் வாங்கி பணத்தை அவருக்கு கொடுத்து விடுவேன். மூன்று வீடுகளை விட்டு ரோட்டுக்கு வந்து விட்டேன். உண்மை சம்பவங்களை படமாக்க முடியவில்லை என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கோர்ட்டு உத்தரவுப்படி முத்துலட்சுமி காட்சி நீக்கம்: வீரப்பன் பற்றிய வனயுத்தம் படம் 15-ந்தேதி ரிலீஸ்
» எதிர்ப்பு எதிரொலி: தனுஷ் புகை பிடிக்கும் காட்சி நீக்கம்?
» துப்பாக்கி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்: இயக்குநர் முடிவு
» வனயுத்தம் படத்துக்கு தடை நீக்கம்
» இரண்டாவது படத்தில் விஜயலட்சுமி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum