தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் சங்க செயற்குழு நாளை கூடுகிறது: விஷால், குமரிமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

Go down

நடிகர் சங்க செயற்குழு நாளை கூடுகிறது: விஷால், குமரிமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? Empty நடிகர் சங்க செயற்குழு நாளை கூடுகிறது: விஷால், குமரிமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

Post  ishwarya Sat Mar 16, 2013 1:23 pm

நடிகர் சங்க செயற்குழு நாளை (28-ந்தேதி) கூடுகிறது. இதில் நடிகர்கள் விஷால், குமரிமுத்து பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் முடிவு செய்யப்படுகிறது. செயற்குழுவில் நேரில் ஆஜராகுமாறு குமரிமுத்துக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

‘விஸ்வரூபம்’ பட விவகா ரத்தில் கமலுக்கு நடிகர் சங்கம் உதவவில்லை என்று விஷால் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் விஷாலுக்கு நடிகர் சங்கத்தில் எதிர்ப்பு கிளம்பியது. ‘விஸ்வரூபம்’ படம் வெளிவர நடிகர் சங்கம் சார்பில் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் எனவே உண்மைக்கு புறம்பாக கருத்துக்களை வெளியிட்ட விஷால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்க கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டது.

இதையடுத்து விஷாலுக்கு நடிகர் சங்கம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு விஷால் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். இந்த கடிதம் நடிகர் சங்க செயற்குழுவில் நாளை வைக்கப்படுகிறது. அதன் மீது விவாதம் நடக்கிறது.

அதுபோல் குமரிமுத்து நடிகர் சங்க பொறுப்பில் இருப்பவர்களை விமர்சித்து கடிதம் எழுதியது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. நாளைய செயற்குழுவில் தன்னால் ஆஜராக இயலாது என்று குமரிமுத்து பதில் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியுள்ளது என்றும் 15 தினங்களுக்கு முன்னால் கடிதம் அனுப்பி தெரிவித்தால் செயற்குழுவுக்கு வருவேன் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அசின் மீது நடவடிக்கை என்ன… நாளை முடிவு செய்கிறது நடிகர் சங்கம்!
» ஐஸ் மீது நடவடிக்கை எடுக்குமா நடிகர் சங்கம்?
» விஷால், குமரிமுத்துக்கு மீண்டும் நோட்டீஸ்: நடிகர் சங்க செயற்குழுவில் முடிவு
» ஜனவரி 7-ம் தேதி உண்ணாவிரதத்தில் பங்கேற்காத நடிகர் நடிகைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
» நடிகர் சங்கம் மீது விஷால் கோபம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum