தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சேவை வரிக்கு எதிர்ப்பு திரையுலகினர் உண்ணாவிரதம்

Go down

சேவை வரிக்கு எதிர்ப்பு திரையுலகினர் உண்ணாவிரதம்  Empty சேவை வரிக்கு எதிர்ப்பு திரையுலகினர் உண்ணாவிரதம்

Post  ishwarya Thu Mar 14, 2013 1:39 pm

சென்னை : மத்திய அரசு விதித்துள்ள சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஜனவரி 7,ம் தேதி தென்னிந்திய திரையுலகினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதுபற்றி அறிவிப்பதற்கான அவசர கூட்டம், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நேற்று நடந்தது. தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பொருளாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் சங்க பொருளாளர் எஸ்.பி.ஜனநாதன், ‘பெப்சி’ செயலாளர் ஜி.சிவா, நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி உட்பட பலர் கலந்துகொண்டனர். பிறகு சரத்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த ஆண்டுக்கான மத்திய அரசு பட்ஜெட்டில், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் தவிர, திரைப்படத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பிரிவினருக்கும் தொலைக்காட்சி துறை தொழிலாளர்களுக்கும் 1.7.2012ம் தேதி முதல் 12.3 சதவீதம் சேவை வரி அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் துயரம் அடைந்துள்ளனர். இந்நிலை நீடித்தால், ஏற்கனவே நசிந்துள்ள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொழில், அழியும் நிலை ஏற்படும்.

எனவே, இந்த சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஜனவரி 7,ம் தேதி சென்னையில் தென்னிந்திய திரையுலகினர், ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மற்றும் அறப்போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். அதற்கான இடம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். இதில் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி, இயக்குனர்கள் சங்கம், சின்னத்திரை சங்கங்கள், திரைப்பட வர்த்தக சபை உட்பட தென்னிந்திய திரையுலகினர் கலந்துகொள்கிறார்கள். தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களிடம் இதுபற்றி பேச உள்ளோம். ஜனவரி 7ம் தேதி படப்பிடிப்புகள் மற்றும் எந்தவிதமான பணிகளும் நடைபெறாது. மேலும், நிதியமைச்சரை டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனுவும் கொடுக்க உள்ளோம். இவ்வாறு சரத்குமார் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum