தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இளம் பெண்ணை அந்தரங்கமாக வீடியோ படமெடுத்து கப்பம் கோரியவருக்கு விளக்கமறியல்!

Go down

இளம் பெண்ணை அந்தரங்கமாக வீடியோ படமெடுத்து கப்பம் கோரியவருக்கு விளக்கமறியல்! Empty இளம் பெண்ணை அந்தரங்கமாக வீடியோ படமெடுத்து கப்பம் கோரியவருக்கு விளக்கமறியல்!

Post  meenu Wed Mar 13, 2013 5:16 pm

video-shooting

உறவினரான இளம் பெண் ஒருவரை இரகசியமான முறையில் வீடியோ படமெடுத்துவிட்டு அதனை வெளியிடப்போவதாக அச்சுறுத்தி 10 இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக கோரிய குடும்ஸ்தரொருவர் கைது செய்யப்பட்டு கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் கணினி பயிற்சி நிலையமொன்றினை நடத்தி வரும் குடும்பஸ்தரொருவர் புத்தளத்திலுள்ள தனது உறவினர் வீடொன்றிற்கு அண்மையில் சென்றுள்ளார். அங்கு அந்த வீட்டு உரிமையாளரின் மகளது அறைக்குள் வீடியோ கமராவினை வைத்து இவர் படம் பிடித்துள்ளார்.

இதனை வெளியே காண்பிக்கப்போவதாக மிரட்டி குறித்த நபர் 10 இலட்சம் ரூபா கப்பத்தினை குறித்த யுவதியிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து பெரும் அச்சம் கொண்ட யுவதி இது தொடர்பில் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்கான பொலிஸ் பிரிவில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் அவர் மீது கப்பம் கோரிய குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்தனர். நேற்றுமுன்தினம் குறித்த சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டதையடுத்து எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம் பெண்ணை பலாத்காரத்திற்கு உட்படுத்திய முதியவர்!
» ஓடும் பஸ்ஸில் பயணிகள் முன்பாக இளம் பெண்ணை கற்பளித்த கொடூரன்! (படங்கள்)
» 13 வயது இளம் பெண்ணை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த அப்பா, அண்ணன் கைது!
» துப்பாக்கி முனையில் 30 வயது பெண்ணை கற்பழித்து வீடியோ எடுத்த கமல்ஹசன், நாசர்!
» எம்.எல்.ஏ. இளம் பெண்ணுடன் உல்லாச வீடியோ! ‘காவி’ கட்சி என்றார்களே பாவிகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum