தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டெல்லி மாணவி வேடத்தில் நடிக்க தயார் : லட்சுமிராய் பேட்டி

Go down

டெல்லி மாணவி வேடத்தில் நடிக்க தயார் : லட்சுமிராய் பேட்டி  Empty டெல்லி மாணவி வேடத்தில் நடிக்க தயார் : லட்சுமிராய் பேட்டி

Post  ishwarya Wed Mar 13, 2013 5:00 pm

டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியின் கதையில் நடிக்க தயார் என்றார் லட்சுமிராய். டெல்லியில் பஸ்சில் கடத்தப்பட்டு மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. பரபரப்பான இந்த சம்பவம் தெலுங்கில் திரைப்படம் ஆக உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி வேடத்தில் நடிப்பீர்களா என்று லட்சுமிராயிடம் கேட்டபோது பதில் அளித்தார். இது பற்றி அவர் கூறியதாவது: பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி வேடத்தில் நடிக்க வேண்டாம் என்று சிலர் சொல்கின்றனர்.

ஏன் நடிக்கக்கூடாது? நாடு முழுவதும் எல்லோர் மனதையும் பாதித்த சம்பவம். இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நடத்தியதுபோன்ற ஒரு போராட்டம் இதற்கு முன் நடந்ததில்லை. இந்த வேடம் ஏற்பதன் மூலம் எனது பங்கையும் சிறிதளவாவது பிரதிபலிக்க முடியும். இந்த வேடத்தை ஏற்பதன் மூலம் சமுதாயத்தில் எவ்வளவு ஆபத்து இருக்கிறது என்பதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனை வருக்கும் உணர்த்த முடியும். இந்த வேடம் ஏற்பதால் இமேஜ் பாதிக்கும் என சிலர் சொல்வதெல்லாம் மடத்தனம். என்னை யாராவது இந்த வேடத்தில் நடிக்க அழைத்தால் நிச்சயம் நடிப்பேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum