தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சேட்டைக்காக சென்னையில் மும்பை செட்

Go down

சேட்டைக்காக சென்னையில் மும்பை செட்  Empty சேட்டைக்காக சென்னையில் மும்பை செட்

Post  ishwarya Wed Mar 13, 2013 4:52 pm

சென்னை : ‘சேட்டை’ படத்துக்காக மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியை அப்படியே செட்டாக நிர்மாணிக்கிறார்கள். யுடிவி தயாரிக்கும் படம், ‘சேட்டை’. இந்தியில் வெளியான ‘டெல்லி பெல்லி’ படத்தின் ரீமேக். ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, அஞ்சலி, ஹன்சிகா உட்பட பலர் நடிக்கிறார்கள். ஆர்.கண்ணன் இயக்குகிறார். இந்தப் படத்துக்காக மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியை செட் போட்டு பாடல் காட்சியை படமாக்க உள்ளனர்.

இதுபற்றி ஆர்.கண்ணன் கூறியதாவது: இது ஜாலியான படம். ஆர்யா, அஞ்சலி பத்திரிகை நிருபர்களாக நடிக்கின்றனர். ஹன்சிகா விமானப் பணிப்பெண். சந்தானம் கிசு கிசு எழுதும் நிருபராக நடிக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியும் எல்லாரும் ரசிக்கும் படி இருக்கும். படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துவிட்டது. தமன் இசையில், நா.முத்துக்குமார் எழுதிய, ‘லைலா லைலா லைலா/உன் நெஞ்சில தங்கிட வாடகை கேட்கிற லைலா/’ என்ற பாடல் காட்சி அடுத்த வாரம் படமாக்கப்படுகிறது.

இந்தப் பாடலில் ஆட முன்னணி நடிகை ஒருவரிடம் பேசி வருகிறோம். இந்த பாடல் காட்சிக்காக மும்பையில் பாந்த்ரா பகுதி செட் பல லட்சம் செலவில் பின்னி மில்லில் போடப்படுகிறது. படத்தின் பெரும்பாலான பகுதி முடிவடைந்துவிட்டது. இம்மாத இறுதியில் பாடல் வெளியீடு இருக்கும். இவ்வாறு கண்ணன் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» துப்பாக்கி - எதிர்பார்ப்பில் மும்பை
» சினிமா ‘செட்’ டால் பரபரப்பு
» எந்த நடிகரையும் செட் பண்ணவில்லை- அசின்
» ராசு.மதுரவன் இயக்கும் மைக் செட் பாண்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum