தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீ மஹா வாராஹி

Go down

 ஸ்ரீ மஹா வாராஹி Empty ஸ்ரீ மஹா வாராஹி

Post  meenu Fri Mar 08, 2013 1:09 pm

அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாக விளங்குபவள் ஸ்ரீலலிதா திரிபுர சுந்தரி. உலகத்திற்கே தாயாக விளங்குபவள். அந்த தாயின் அங்குசத்திலிருந்து தோன்றியவள் வாராகி. ஸ்ரீலலிதாவின் மெய்க் காப்பாளினியாகவும் நால்வகை படைத் தளபதியாகவும் ஸ்ரீபுரத்தை ரட்சிப்பவளாகவும் விளங்குகிறாள்.
பன்றியின் முகம், பெண் உடல், 8 கரங்கள் கொண்டவள். சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை- அவளுடைய முக்கிய ஆயுதங்கள். சிம்மம், வாகனம். போருக்கு எல்லாவித ஆயுதங்களுடனும் வாகனங்களுடனும் சூழப் புறப்படுகிறாள்.

பில்லி, சூனியம், ஏவல், பேய், பிசாசு போன்ற தீய சக்திகளில் இருந்தும், பகைவர்களிடமிருந்தும் நம்மைக் காப்பவள் வாராஹி ஆவாள். வாராஹியை வழிபட்டால் துஷ்ட சக்திகள் விலகும். திருமணத் தடை நீங்கும். செவ்வாய் தோஷம் மற்றும் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும். சிவப்பு மலர்மாலையும் மஞ்சள் புடவையும் அணிவித்தால் நினைத்த காரியம் கைகூடும்.

வாராஹி ஸ்லோகம்:

அஷ்ட லஷ்மி ஸ்வரூபிணி அஷ்ட
தாரித்திரிய நாசினி இஷ்ட காம
பிரதாயினி ஸ்ரீ வாராகி நமோஸ் துதே
ஓம் நமோ வாராஹி!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum