தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹெலிகாப்டரிலிருந்து விழுந்த பியா, பிந்து மாதவி

Go down

ஹெலிகாப்டரிலிருந்து விழுந்த பியா, பிந்து மாதவி Empty ஹெலிகாப்டரிலிருந்து விழுந்த பியா, பிந்து மாதவி

Post  ishwarya Fri Mar 08, 2013 11:49 am


ஹாங்காங்கில் நடந்த படப்பிடிப்பில் ஹெலிகாப்டரில் தொங்கியபடி பறந்த பியா, பிந்து மாதவி இருவரும் கீழே தவறி விழுந்து படுகாயமுற்றதாக தகவல் தெரிய வந்துள்ளது.

சட்டம் ஒரு இருட்டறை படத்தை அதே பெயரில் எஸ்.ஏ.சந்திரசேகரனின் உறவினர் சினேஹா பிரிட்டோ ரிமேக் செய்து வருகிறார். தமன் குமார், ரிமா சென், பியா, பிந்து மாதவி நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி, சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. பிறகு ஹாங்காங் சென்றனர்.

இங்கு பியா, பிந்து மாதவி இருவரும் ஹெலிகாப்டரில் தொங்கியபடி வரும் காட்சியை மிகக் குறைந்த உயரத்தில் ஹெலிகாப்டரை பறக்கவிட்டு படமாக்கியதாக தெரிகிறது. இதில் இருவருமே தவறி கீழே விழுந்துள்ளனர். ஹெலிகாப்டர் தரைக்கு அருகில் பறந்ததால் அதிக காயமில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹாலிவுட்டில்கூட இப்படிப்பட்ட காட்சிகளை பாதுகாப்பாக ஸ்டுடியோக்களில்தான் படமாக்குவார்கள். சார்லீஸ் ஏஞ்சல்ஸ் ஹெலிகாப்டர் காட்சிகள் ஸ்டுடியோவில்தான் படமாக்கப்பட்டது.

தமிழ்ப் படத்தில் எப்படி நடிகைகள் துணிந்து ஹெலிகாப்டரில் தொங்கினார்கள் என்பது ஆச்சரியம்தான்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum