தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதலியை கரம் பிடித்தார் வினீத் சீனிவாசன்

Go down

காதலியை கரம் பிடித்தார் வினீத் சீனிவாசன் Empty காதலியை கரம் பிடித்தார் வினீத் சீனிவாசன்

Post  ishwarya Thu Mar 07, 2013 2:02 pm


இந்த வருடம் வினீத் சீனிவாசனுக்கு ஆகோஷத்தின் வருடமாகியிருக்கிறது. இவ‌ரின் இயக்கத்தில் வெளிவந்த தட்டத்தின் மறயத்து சென்சேஷனல் ஹிட். நேற்று தனது நீண்ட நாள் காதலிலும் முழுமையான வெற்றியை தனதாக்கினார்.


பிரபல நடிகரும், திரைக்கதையாசி‌ரியரும், இயக்குனருமான சீனிவாசனின் மகன் வினீத் சீனிவாசன். சில படங்களில் நடித்துள்ளார். நல்ல பாடகர். அங்காடித்தெருவில் இடம்பெற்ற அவள் அப்படியொன்றும் அழகில்லை பாடல் இவ‌ரின் குரல் வளத்துக்கு சான்று.

ஆனால் இன்று இவையனைத்தையும் தாண்டி வினீத் கேரளா விரும்பும் இயக்குனர். முதல் படம் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் சுமாராகப் போனாலும் இரண்டாவது படம் தட்டத்து மறயத்து சூப்பர்ஹிட். கோடிகளை அள்ளியது. இன்று மோகன்லால், மம்முட்டிக்கெல்லாம் இவரும் காசிலின் மகன் பகத் காசிலும்தான் போட்டி.

சென்னையில் தங்கி படித்து வந்த வினீத் தன்னுடன் படித்த திவ்யாவை காதலித்தார். கேரளா பையனூரைச் சேர்ந்தவர் திவ்யா. இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெ‌ரிவித்ததைத் தொடர்ந்து நேற்று கண்ணூ‌ரில் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்தது.

மணமக்களுக்கு நமது வாழ்த்துகள்.
காதலி திவ்யா வினீத் சீனிவாசன் திருமணம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum