தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யுவன் இசை மேற்பார்வையில் பாரசீக மன்னன்

Go down

யுவன் இசை மேற்பார்வையில் பாரசீக மன்னன் Empty யுவன் இசை மேற்பார்வையில் பாரசீக மன்னன்

Post  ishwarya Thu Mar 07, 2013 11:25 am

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மேற்பார்வையில் ஒரு படம். ஆச்சரியமாக இருக்கிறதா? விரிவாக பார்ப்போம்.

இயக்குனர் சுரேஷ் என்றால் பலருக்கு தெரியாது. சினேகா, மாதவன் நடித்த என்னவளே படத்தை இயக்கியவர். பெரிய இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் கம் நடிகராக திரும்பி வந்திருக்கிறார். இவர் இயக்கும் பாரசீக மன்னனில் இவர்தான் ஹீரோ.

இந்தப் படத்துக்கு இவர்தான் இசையமைப்பாளர். இசை மேற்பார்வை யுவனாம். இவர் இசையமைப்பதை யுவன் எப்படி மேற்பார்வைப் பார்ப்பார் என்று தெரியவில்லை. யுவனுக்கு இந்த விஷயம் தெரிந்திருக்குமா என்றும் தெரியாது. சரி, அவரிடம் பர்மிஷன் கேட்காமல் மேற்பார்வை யுவன் என்று போடுவாரா?

குழந்தைக் கடத்தலை மையமாக வைத்து இந்தப் படத்தை சுரேஷ் உருவாக்கி வருகிறார். ஒரு தலைமுறையே இந்த கடத்தல் காரணமாக சிதைகிறது என்பது படத்தின் மையக்கதை. அதற்காக காதல் டூயட் எல்லாம் இல்லாமல் இல்லை. ஸ்ருதி லட்சுமி என்ற மலையாள நடிகையை அறிமுகப்படுத்துகிறார்கள். சுரேஷுக்கு இவர்தான் ஜோடி.

குழந்தைக் கடத்தல் கதைக்கு பாரசீக மன்னன் என்று பெயரா? என்ற உங்கள் சந்தேகம்தான் நமக்கும். நான் வளைகுடா நாட்டில் சம்பாதித்து தமிழகம் வந்ததால் என்னை நண்பர்கள் பாரசீக மன்னன் என்று அழைப்பார்கள், அதையே படத்துக்கு வைத்துவிட்டேன் என்றார் சுரேஷ்.

அட, பெருக்குப் பின்னால் இப்படியெல்லாம் காரணம் இருக்கிறதா?
யுவன் ஷங்கர் ராஜா, சினிமா, தமிழ், இசை

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum