தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜய் படத்தின் தலைப்பு தங்கமகன்?

Go down

விஜய் படத்தின் தலைப்பு தங்கமகன்? Empty விஜய் படத்தின் தலைப்பு தங்கமகன்?

Post  ishwarya Tue Mar 05, 2013 2:37 pm

ஏஎல் விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்துக்கு தங்கமகன் பெயரை தேர்வு செய்திருப்பதாக கசிந்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் தலையாய பிரச்சனையாக மாறி வருகிறது படத்தின் பெயர்கள். அரை டஜன் படங்கள் இப்போதும் பெயர் பிரச்சனையில் சிக்கியுள்ளன. விஜய்யின் துப்பாக்கி படம் ஒன்பது வாரங்கள் நெருக்கடியை சந்தித்தது நினைவிருக்கலாம்.

விஜய்யின் புதிய படத்துக்கு தலைவன் என்ற பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பெயரில் சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரன் ஒரு படத்தை எடுத்து வருகிறார். பாஸ் என்கிற பெயரில் அவரே ஹீரோவாக நடிக்கிறார். இதன் காரணமாக தலைவன் ஆசையை விஜய் அண்ட் விஜய் டீம் பரணில் போட்டது.

இந்நிலையில் தங்கமகன் என்ற பெயரை விஜய் படத்துக்கு தேர்வு செய்திருப்பதாக கசிந்துள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. விஜய் திரையுலகுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது. இந்த நேரத்தில் தங்கமகன் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறார்கள். தங்கமகன் ரஜினி, பூர்ணிமா நடித்த படத்தின் பெயர். ஆரம்ப காலத்தில் ரஜினியை தனது ரோல் மாடல் என்று சொல்லி வந்த விஜய் இப்போது எம்ஜிஆர் ரசிகராக தன்னை காட்டி வருகிறார். அதனால் விஜய் மீது கடுப்பில் இருக்கும் ரஜினி ரசிகர்கள் தலைவர் படத்தின் பெயர் விஜய் படத்துக்கா என்று தங்களின் எதிர்ப்பை முணுமுணுப்பாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தங்கமகன் குறித்து விஜய் தரப்பு இன்னும் கருத்து ஏதும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum