தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பரதேசி தாமதம் ஏன்?

Go down

பரதேசி தாமதம் ஏன்?                             Empty பரதேசி தாமதம் ஏன்?

Post  ishwarya Mon Mar 04, 2013 12:48 pm



பல மாதங்களுக்கு முன்பே பரதேசி படம் முடிவடைந்தது. பாலுமகேந்திரா, அனுராக் காஷ்யப் போன்றவர்கள் படத்தைப் பார்த்து வியந்து பாராட்டியிருக்கிறார்கள். இருவருமே சொன்ன முக்கியமான விஷயம், இதுவரை பாலா இயக்கிய படங்களிலேயே இதுதான் பெஸ்ட்.

மலையாள நாவலை மேலோட்டமாக தழுவி எடுக்கப்பட்ட பரதேசிக்கு நாஞ்சில் நாடன் வசனம் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை. அதர்வா, வேதிகா, தன்ஷிகா முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.

பிவிபி சினிமா தயாரித்த இந்தப் படத்துக்கு ஒருகட்டத்தில் பாலாவே பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பேனரில் இந்தப் படம் வெளியாகிறது. ஒவ்வொரு விநியோகஸ்தரையும் சந்தித்து படத்தை பேரம் பேசி விற்பதுக்குப் பதில் மொத்தமாக ஒருவரிடம் படத்தை கைமாற்றிவிட விரும்புகிறார் பாலா. அதுதான் சேஃப், தலைவலி இல்லாதது.

பாலா எதிர்பார்த்த அந்த ஆள் சிக்காமலே இருந்தார். அதுதான் தாமதம். ஆனால் தற்போது ஆஸ்கர் ரவிச்சந்திரன் பரதேசியின் ஒட்டு மொத்த விநியோக உரிமையை வாங்க முன் வந்திருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அனைத்தும் சுமூகமாக முடியும், படமும் ஒருவாரத்திற்குள் வெளியாகும் என பாலா தரப்பு நம்பிக்கையுடன் உள்ளது.

விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum