தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னை மெட்ரோ ரெயில் திட்ட விபத்தில் மீண்டும் ஒருவர் மரணம்

Go down

சென்னை மெட்ரோ ரெயில் திட்ட விபத்தில் மீண்டும் ஒருவர் மரணம் Empty சென்னை மெட்ரோ ரெயில் திட்ட விபத்தில் மீண்டும் ஒருவர் மரணம்

Post  meenu Sat Mar 02, 2013 1:35 pm

சென்னையில் மெட்ரோ ரயில் அமைக்கும் பணியில் மீண்டும் ஒரு விபத்து நடைபெற்றுள்ளது.

வியாழன் அதிகாலை மூன்று மணி அளவில் ஆலந்தூர் அருகே
இராட்சத இயந்திரம் ஒன்று சரிந்து விழுந்ததில் பீகாரை சேர்ந்த திம்பால் ஷா
(24) என்பவர் சிக்கி உயிரிழந்தார்.

சிக்கிய வேறிருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைதாகியிருக்கின்றனர். தனியார் நிறுவனம் ஒன்று இப்பகுதி கட்டுமானப்பணியை மேற்கொண்டிருக்கிறது,

அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் எப்படி விபத்து நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்திவருவதாகக் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிரேன் ஒன்று சரிந்து
விழுந்ததில் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் ஒருவர் அதில்
சிக்கி இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவ்விபத்திலும் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர்தான் பலியானார்.

இனி இத்தகைய விபத்துக்கள் நிகழாவண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் அப்போது உறுதியளித்திருந்தனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum