தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியாவுக்கு ஹெலிகாப்டர் விற்றதில் ஊழல் - அதிகாரி கைது

Go down

இந்தியாவுக்கு ஹெலிகாப்டர் விற்றதில் ஊழல் - அதிகாரி கைது  Empty இந்தியாவுக்கு ஹெலிகாப்டர் விற்றதில் ஊழல் - அதிகாரி கைது

Post  meenu Sat Mar 02, 2013 12:58 pm

இத்தாலியின் விமானத் தயாரிப்பு மற்றும் ஆயுதத் தளவாட
நிறுவனமான பின்மெகானிகாவின் தலைமை அதிகாரி இந்தியாவுடன் தொடர்புடைய ஒரு
பரிவர்த்தனையில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது
செய்யப்பட்டுள்ளார்.

இந்நிறுவனத்திடமிருந்து 12 ஹெலிகாப்டர்களை இந்தியா
வாங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற தலைமை அதிகாரி கியுசேபி ஒர்சி லஞ்சம்
கொடுத்துள்ளார் என்ற புகார் தொடர்பில் பல மாதங்களாக விசாரணைகள் நடைபெற்று
வருகின்றன.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை ஒர்சி மறுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டபிறகு
பின்மெக்கானிகாவின் பங்குகளின் மதிப்பு 9 சதவீதம் வீழ்ந்துள்ளது. இந்த
விடயம் தொடர்பாக சட்டம் தனது கடமையை செய்யும் என்று இத்தாலிய பிரதமர்
மாரியோ மாண்டி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில்
தெரிவித்துள்ளார்.

பின்மெக்கானிக்காவின் நிர்வாகத்தில் குளறுபடிகள் இருக்கின்றன–அதை நாம் சந்திக்க வேண்டும் என்றும் இத்தாலியப் பிரதமர் கூறியுள்ளார்.

ஸ்விட்சர்லாந்தில் வாழும் இருவருக்கு எதிராக
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்தியா வாங்கிய ஹெலிகாப்டர்களை
தயாரிக்கும் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் கிளையின் தலைவர் வீட்டுக் காவலில் தற்போது
வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தமக்கு அதிகாரபூர்வமாக
தெரிவிக்கப்படவில்லை என்று இந்தியா கூறுகிறது. ஆயினும் இந்த விடயம்
குறித்து தனியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு
கூறியுள்ளது.

பின்மெகானிகாவின் 30 சதவீதப் பங்குகளை இத்தாலி
அரசுதான் வைத்துள்ளது. சுமார் 4000 ஆயிரம் கோடி ரூபாய் பெருமானமுள்ள 12
ஹெலிகாப்படர்களை வாங்க 2010 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் இந்த
நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன அடிப்படையில் ஏற்கனவே
மூன்று விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான போதே அதில் ஊழல் பணம்
கொடுக்கக் கூடாது என்று ஒரு விதி இருந்த்தாகவும் – அப்படி பணம்
கொடுத்திருந்தால் அந்த நிறுவனத்தின் மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட
நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவுக்கு வாய்ப்புள்ளது என்றும் செய்தியாளர்கள்
கூறுகின்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பாக். பிரதமரின் ஊழல் வழக்கை விசாரித்த போலிஸ் அதிகாரி மரணம்
» டெல்லியில் ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரித்துறை அதிகாரி கைது
» ஹெலிகாப்டர் ஊழல் பிரச்சினையில் கருணை காட்ட மாட்டோம் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி உறுதி
» லண்டனில் ஹெலிகாப்டர் விபத்தில் இருவர் மரணம்
» பாக். பிரதமரின் ஊழல் வழக்கை விசாரித்த போலிஸ் அதிகாரி மரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum